பிறந்தநாளில் சச்சினை அவமதித்த ஆஸ்திரேலியா…கொதித்து எழுந்த ரசிகர்கள் – காரணம் இதுதான் ?

tendulkar
- Advertisement -

கிரிக்கெட் உலகின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தனது 45 பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் . இதனை முன்னிட்டு பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் , பிரபலங்களும் , ரசிக பெருமக்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.ஆனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கம் சச்சின் பிறந்த நாளை கேலி செய்யும் விதமாக ட்விட்டரில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

இன்று சச்சின் பிறந்த அதே தேதியில் தான் ஆஸ்திரேலியா வை சேர்ந்த முன்னாள் வேக பந்து வீச்சாளர் டெமின் பிலெம்மிங்கிற்கும் பிறந்தநாள். இன்று தனது 48 வயதை எட்டிய அவர் ஆஸ்திரேலியா அணிக்காக 7 வருடங்கள் விளையாடியுள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் ட்விட்டர் பக்கத்தில் பிலெம்மிங் வீசிய பந்தில் சச்சின் போல்ட் ஆகும் வீடியோ ஒன்றை பதிவுசெய்து பிலெம்மிங்கிற்கு பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளனர்.

இந்த பதிவை பார்த்த இந்திய ரசிகர்கள் ஆஸ்த்ரேலியாவின் இந்த கேவலமான செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஒரு ரசிகர் அதே தொடரில் சச்சின் பிலெம்மிங்கின் பந்துகளை விளாசி தள்ளும் வீடியோ பதிவை ஒன்றை பதிவிட்டு இதை நீங்கள் மறந்து விட்டீர்கள் என்று கமென்ட் செய்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் ஜாம்பவானாகவும் , கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடவுளாக தெரிந்த சச்சினை இது போன்று அப்பதனமாக கொச்சை படுத்தும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கத்தை ரசிகர்களும் பிரபலங்களும் திட்டித்
தீர்த்து வருகின்றனர்

Advertisement