2013இல் கொடுத்த அப்பாவின் கயிறை மறக்க முடியாது.. ஓய்வு பெற்ற கிங் கோலியை.. வாழ்த்திய ஜாம்பவான் சச்சின்

Sachin Tendulkar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 2011ஆம் ஆண்டு அறிமுகமான அவர் ஆரம்பக் காலங்களில் தடுமாற்றமாக விளையாடினார். இருப்பினும் அப்போது கேப்டன் தோனியின் ஆதரவுடன் குறுகிய காலத்திலேயே அசத்தத் துவங்கிய அவர் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஓய்வுக்கு பின் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக உருவெடுத்தார்.

2013க்குப்பின் உலகின் அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். அதே போல 2014ஆம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற அவரது தலைமையில் 2016 – 2021 வரை உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலித்த இந்தியா ஏராளமான வெற்றிகளைப் பெற்றது. குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைத்தது.

- Advertisement -

விடை பெற்ற கிங்:

2022ஆம் ஆண்டு டெஸ்ட் கேப்டன்ஷிப் பொறுப்பை துறந்த விராட் கோலி சாதாரண பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடி வந்தார். இருப்பினும் சமீபத்திய வருடங்களில் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவிக்கத் தவறிய அவர் விமர்சனங்களைச் சந்தித்தார். அதனால் தற்போது வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் இன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் மகத்தான வீரராக விடை பெற்றுள்ள விராட் கோலி 2013இல் அவருடைய அப்பா அன்பளிப்பாக கொடுத்த கைற்றை தமக்கு அன்புடன் கொடுக்க வந்ததாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். அப்படிப்பட்ட நல்ல மனம் கொண்ட விராட் கோலி ஓய்வு பெற்றுள்ளதற்கு சச்சின் விடுத்துள்ள பாராட்டு பின்வருமாறு. “நீங்கள் டெஸ்டில் இருந்து ஓய்வு பெறும் இச்சமயத்தில் ​​12 வருடங்களுக்கு முன் என்னுடைய கடைசி போட்டியின் போது ​​உங்கள் சிந்தனைமிக்க செயலை நினைவுபடுத்துகிறேன்”

- Advertisement -

சச்சின் பாராட்டு:

“மறைந்த உங்கள் தந்தையிடமிருந்து ஒரு நூலை எனக்கு பரிசளிக்க முன்வந்தீர்கள். அது நான் ஏற்றுக்கொள்ள முடியாத தனிப்பட்ட ஒன்று. ஆனால் அந்த செயல் மனதைக் கவரும் மற்றும் அன்றிலிருந்து என்னுடன் இருந்து வருகிறது. பதிலுக்கு வழங்க என்னிடம் நூல் இல்லை என்றாலும் நீங்கள் எனது ஆழ்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கொண்டுள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்ளவும்”

இதையும் படிங்க: மிஸ்ஸான வாழ்நாள் சாதனை.. சுயநலமான கோலி என்று விமர்சித்த முகங்களில் கரியை பூசி.. விடை பெற்ற கிங்

“விராட் உங்கள் உண்மையான மரபு எண்ணற்ற இளம் வீரர்களை விளையாட்டை உயர்த்த ஊக்குவிப்பதில் உள்ளது. நீங்கள் என்ன நம்ப முடியாத டெஸ்ட் கேரியயைப் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு வெறும் ரன்களை மட்டும் கொடுக்கவில்லை. புதிய தலைமுறை ரசிகர்களையும் வீரர்களையும் கொடுத்திருக்கிறீர்கள். மிகவும் சிறப்பான டெஸ்ட் கேரியருக்கு வாழ்த்துக்கள்” எனக் கூறினார்.

Advertisement