பேட்ஸ்மேன்களுக்கு ஏற்படும் பாதிப்பினை தவிர்க்க இந்த விதிமுறையை கொண்டுவர வேண்டும் – ஐ.சி.சி யிடம் வேண்டுகோள் வைத்த சச்சின்

Sachin
- Advertisement -

தொழில்முறையாக கிரிக்கெட் விளையாடப்படும் போது சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் விளையாடக்கூடாது. அப்படி இருந்தும் பல அசம்பாவிதங்களும் சேதங்களையும் கிரிக்கெட் உலகம் சந்தித்திருக்கிறது. கடந்த ஐந்து வருடத்திற்கு முன்னர் பிலிப் ஹியூஸ் எனும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் தலையில் பந்து பட்டு மைதானத்திலேயே உயிரிழந்த சம்பவத்தை பார்த்திருப்போம். அப்போது அவர் ஹெல்மெட் அணிந்து இருந்தார்.

Hughes

- Advertisement -

அப்படி இருந்தும் அவரது பின் தலைக்கு கீழ் புறம் வேகமாக வந்த பந்து தாக்கியதால் மைதானத்திலேயே சுருண்டு விழுந்து மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்னே உயிரிழந்தார். அதனை தொடர்ந்து ஹெல்மெட் விதிகள் கடுமையாக்கப்பட்டு பின்புறம் சில காப்புகள் கொடுக்கப்பட்டது. அப்படி இருந்தும் இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களின் தலைக்கு குறிவைத்து பல பந்துகளை வீசுவார்கள். தலையில் தாக்கி விட்டால் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை எளிதில் வீழ்த்தி விடலாம் என்று பந்துவீச்சாளர்கள் தற்போது வரை நினைத்து வருகின்றனர். அதே நேரத்தில் தலையில் பந்து பட்டு ரத்தம் சொட்டச் சொட்ட வெளியேறிய பேட்ஸ்மேன்களும் இருக்கின்றனர்.

Smith

இந்நிலையில் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவதற்கும் மேலும் சில விதிகளை கிரிக்கெட்டிற்கு கொண்டுவரவும் சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் வேண்டுகோள் வைத்திருக்கிறார். அவரது ட்விட்டர் பக்கத்தில்… கிரிக்கெட் வேகமாக வளர்ந்து வருகிறது, ஆனால் பாதுகாப்பாக வளர்கிறதா என்பதுதான் கேள்வி?

Smith

சமீபத்தில் இது போன்ற ஒரு மோசமான சம்பவத்தைப் பார்த்தோம். சுழற்பந்து வீச்சாளராக இருந்தாலும் சரி வேகப்பந்து வீச்சாளராக இருந்தாலும் சரி அவர்களுக்கு எதிராக பேட்டிங் செய்யும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். இதனை ஒரு விதியை மாற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் நான் கோரிக்கை வைக்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

Advertisement