செம அடிவாங்கி நல்ல வலி. ஆனா டாக்டரையும் கூப்பிடல வெளியேவும் போகல – முதல் சதம் குறித்து நினைவை பகிர்ந்த சச்சின்

Sachin

சச்சின் டெண்டுல்கர் 1989ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான அதன்பின்னர் 24 வருடங்கள் 464 ஒருநாள் போட்டிகளிலும், 200 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இந்திய அணியின் ஜாம்பவான் ஆக மாறினார். ஆனால், அவர் ஆடிய முதல் டெஸ்ட் போட்டியில் பெரிதாக எடுக்கவில்லை 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி இந்திய சுதந்திர தினத்திற்கு முந்தைய நாள் இங்கிலாந்து நாட்டில் மான்செஸ்டர் நகரில் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.

Sachin 1

இவரது சதத்தின் மூலம் தான் இங்கிலாந்து வெற்றி தடுக்கப்பட்டு அந்த போட்டி டிரா ஆனது. இந்நிலையில் இந்த அற்புதமான சாரத்தை பற்றிய தற்போது நினைவு கூர்ந்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். அவர் கூறுகையில்..
.
ஆகஸ்ட் 14ம் தேதி தனது முதல் சதத்தை எடுத்தேன், அடுத்த நாள் நமது சுதந்திர தினம் அதுதான் ஸ்பெசல். ஒரு டெஸ்ட் போட்டியை டிரா செயவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் தொடர்ந்து என்னை சிறப்பாக விளையாடவைக்க அந்த போட்டி ஒரு பெரிய திருப்பத்தை கொடுத்தது. நல்ல வேகத்துடன் ஸ்விங் கலந்த பந்துவீச்சிற்கு எதிராக நான் மான்செஸ்டர் நகரில் அடித்த அந்த முதல் சதத்தை எப்போதும் என்னால் மறக்க முடியாது.

Sachin

அதேபோல் சியால்கோட் நகரத்தில் நடைபெற்ற போட்டியின்போது பவுன்சர் பந்தில் மூக்கில் அடி வாங்கினேன் . எனக்கு காயம் ஏற்பட்டது அப்படியிருந்தும் 57 ரன் எடுத்து அந்த டெஸ்ட் போட்டியை காப்பாற்றினேன். வக்கார் யூனிஸ் பந்தில் படுகாயம் ஏற்பட்டது வலியுடன் ஆடினேன் அப்படி வலித்தால் பெரிய வீரராக உருவெடுப்பார்கள். இல்லை எனில் காணாமல் போவார்கள்.

ஆனால், நான் அடிவாங்கிவிட்டதை வெளியே எதற்காக காட்ட வேண்டும் என்று வலியுடன் பேட்டிங் செய்தேன் மருத்துவரை கூட அழைக்கவில்லை. ஏனெனில் எனது சிறு வயதில் பயிற்சியில் பல பந்துகளை உடலில் அடிவாங்கி பழகி விட்டேன் என்று கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். மேலும் நான் ஆட்டநாயகன் விருதினை பெறும்போது எனக்கு வயது 17 அப்போது எனக்கு ஷாம்பியன் பாட்டில் ஒன்றினை பரிசளித்தார்கள்.

- Advertisement -

Sachin 1

அப்போது நான் குடிக்கும் வயதினை கூட எட்டியிருக்கவில்லை. இளம் வீரர் என்பதால் அணியில் என்னை வைத்து சில கேலி நிகழ்வுகளும் நடக்கும். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது நான் சிறப்பாக விளையாடியதை தொடர்ந்து சஞ்சய் மஞ்சரேக்கர் எனக்கு ஒரு வெள்ளை நிற சர்ட்டை பரிசளித்தார் என்று ஆகஸ்ட் 14 ஆம் தேதி நினைவு குறித்து பகிர்ந்துகொண்டார்.