தோனி கேப்டன் ஆக நான் சப்போர்ட் பண்ணேன். பி.சி.சி.ஐ யிடமும் பரிந்துரைத்தேன் – தோனி குறித்து மனம்திறந்த சச்சின்

Sachin-2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி கடந்த ஆகஸ்டு 15 ஆம் தேதி இரவு தனது ஓய்வு அறிவிப்பினை இன்ஸ்டாகிராம் மூலம் மிக எளிமையாக அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பை அடுத்து கிரிக்கெட் உலகம் பரபரப்பானது. அவரின் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியது மட்டுமின்றி அவரது நினைவுகளையும் பகிர ஆரம்பித்து அவருக்கான வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

7

தோனியின் ஓய்வு முடிவினை அடுத்து கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வர தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் தோனி உடனான தனது அனுபவம் குறித்து கருத்தை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அதன்படி தோனியை தான் இந்திய அணியின் கேப்டனாக பிசிசிஐ-யிடம் பரிந்துரை செய்ததன் காரணத்தை அவர் விளக்கியுள்ளார். இதுகுறித்து சச்சின் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது : தோனியை அப்போது நான் கேப்டனாக பரிந்துரை செய்ததற்கு காரணம் யாதெனில் டெஸ்ட் போட்டிகளில் ஸ்லீப் பொசிஷன்-ல் நான் பீல்டிங் செய்வேன். அப்போது தோனியுடன் அதிகம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

sachin 1

அப்போது தான் அவரைப் பற்றியும், அவரின் சிந்தனைகளை பற்றியும் என்னால் அறிய முடிந்தது. ஒரு போட்டி எவ்வாறு இறுதி வரை செல்லும், எப்படி செல்லும் என்பதை தோனி முன்கூட்டியே அறியும் ஆற்றலை பெற்றிருந்தார். அவரது அந்த திறன் அபாரமாக இருந்தது மேலும் ஆட்டத்தை எந்த ஒரு சூழ்நிலையிலும் சுமூகமாக எடுத்துச் செல்லவே அவருக்கு சிறந்த அறிவு இருந்தது.

Sachin

இதையெல்லாம் வைத்து தான் தோனியை கேப்டனாக நியமிக்கும்படி நான் பரிந்துரை செய்தேன் என சச்சின் தெரிவித்திருந்தார். மேலும் 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் போது சீனியர் வீரர்கள் விலகியதால் அணிக்கு புதிய கேப்டனாக தோனி தேர்வுசெய்யப்படும் முன் சேவாக், ஹர்பஜன், யுவராஜ் ஆகியோரின் பெயர்கள் கேப்டன் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement