நான் அடிச்சதிலேயே எனக்கு பிடித்த சதம் என்றால் அது இதுதான் – சச்சின் பகிர்ந்த ரகசியம்

Sachin-1
- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் களத்தில் 24 ஆண்டுகளாக பல எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ளார். தற்போது வரை அவரது பல சாதனைகளை முறியடிக்க படாமலேயே இருக்கிறது. இன்னும் வரும் காலத்தில் அவரது சாதனைகள் முறியடிக்கப்படுமா? என்பது சந்தேகம்தான். இந்நிலையில் சசின் டெண்டுள்கர் சமீபத்தில் ஒரு இணையதளம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

Sachin

- Advertisement -

அதில் 22ஆண்டுகளுக்கு முன்னர் துபாய் சார்ஜா மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர் பற்றி பல ருசிகரமான செய்திகள் பற்றி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : 22 வருடத்திற்கு முன்னர் சார்ஜா மைதானத்தில் அடித்த 2 சதங்கள் தற்போது வைரல் ஆகியுள்ளது.

ஒன்று ஆஸ்திரேலியாவிற்கு எதிராக எடுத்த 143 ரன்கள், மற்றொன்று அதே அணிக்கு எதிராக இறுதிப்போட்டியில் எடுத்த 134 ரன்கள். இந்த இறுதிப் போட்டி ஆடிய போது எனக்கு பிறந்தநாள் வேறு அதனால் இந்த சதம் எனக்கு விசேஷமானதாகும். இதனை விட அந்த போட்டியில் எனக்கு மிகவும் சுவாரசியமான விஷயம் ஒன்று நடந்தது.

Sachin

அதை நான் சொல்லியே ஆகவேண்டும். நான் அந்த மைதானத்தில் பேட் செய்து கொண்டிருந்தபோது, திடீரென புழுதிப்புயல் வந்துவிட்டது. புழுதிப்புயல் சூழ்நிலையில் நான் இதுவரை விளையாடியதில்லை. இதனால் எனக்கு பயம் வந்துவிட்டது.புயல் நம்மை தூக்கி சென்று விடும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். நான் ஒல்லியாக இருப்பேன் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை.

- Advertisement -

ஒருவேளை நம்மை புயல் தாக்கினால் அருகில் விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருக்கும் ஆடம் கில்கிறிஸ்ட்டை இறுக கட்டிப் பிடித்துக் கொள்வோம். அப்படி செய்தால் எங்களது இருவரின் எடையையும் புயலால் தூக்கி விட முடியாது. கீழேயும் விழமாட்டோம் என்று நினைத்துக்கொண்டே நான் கில்கிறிஸ்ட் பக்கம் போய் நின்று கொண்டேன்.

sachin

நல்லவேளையாக நடுவர் புயல் வருவதற்கு முன்னதாகவே போட்டியை நிறுத்திவிட்டார் நடுவர் இதனால் நாங்கள் தப்பித்து விட்டோம். அதனைத் தொடர்ந்து இலக்கு குறைக்கப்பட்டு அந்த போட்டியை தொடர்ந்து ஆடினோம் என்று கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். சச்சினின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement