இவரோட ஹாஸ்பிடல் பில் எவ்ளோன்னு சொல்லுங்க நான் காட்டுறேன். சச்சின் முன்வந்து உதவிய இந்த நபர் யார் தெரியுமா ?

Repair

மும்பையைச் சேர்ந்த 67 வயதான அஸ்ரப் சவுத்ரி என்பவர் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் பேட்டை வடிவமைப்பதில் வல்லவர். மேலும் அவர் தரமான பேட்டிகளை வடிவமைப்பது மட்டுமின்றி அவற்றை ரிப்பேர் செய்து கொடுக்கும் வேலையையும் செய்து கொண்டிருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் பல பேட்ஸ்மேன்களுக்கு தனது கையால் பேட்டை வடிவமைத்து கொடுத்து அந்த பேட்டுகளை பயன்படுத்தி பல ரன்களை அவர்கள் சர்வதேச அளவில் குவித்து வருகின்றனர்.

Repair 1

இந்நிலையில் அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் உடல்நல கோளாறு ஆகியவற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எப்போதுமே பிசியாக இருக்கும் அவரை முதலில் கொரோனா பாதிப்பு பொருளாதார ரீதியாக முடக்கியது.

பின்பு உடல் ரீதியாகவும் அவர் கடந்த சில மாதங்களாக பாதிக்கப்பட்டுள்ளார். கிட்னி மற்றும் நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த இவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவரின் நண்பர் பிரசாந்த் ஜெத்மலானி தெரிவித்திருந்தார்.

Repair 2

இவர் பிரபல கிரிக்கெட் வீரர்களான சச்சின், ஷேவாக், கோலி, ஸ்மித் மற்றும் கெயில் ஆகியோர் உபயோகித்த சில பேட்டுகளை அவர் வடிவமைத்துக் கொடுத்துள்ளார். இந்நிலையில் அஷ்ரப் சவுத்ரியின் இந்த உடல்நிலை குறித்த விடயத்தை அறிந்த இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் அவரது மருத்துவ செலவுக்கான தொகையில் பெரும் பகுதியை கொடுத்து உதவி உள்ளதாக தெரிவித்துள்ளார் அவரது நண்பர் பிரசாந்த்.

- Advertisement -

sachin

ஏற்கனவே இதே போன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பேட் ரிப்பேர் தொழில் செய்துவந்த தொழிலாளிக்கு பொருளாதார பிரச்சினை ஏற்பட்டபோது இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் உதவியது குறிப்பிடத்தக்கது.