நோ தோனி, கோலி, ரோஹித் – ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட சிறந்த ஐபிஎல் 2022 கனவு அணி

sachin
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாக கருதப்படும் ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி மும்பை, புனே, கொல்கத்தா அகமதாபாத் ஆகிய நகரங்களில் கடந்த 65 நாட்களாக ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்றுள்ளது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் அஹமதாபாத் நகரில் மே 29-ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. 1 லட்சம் ரசிகர்களுக்கு முன்னிலையில் நடைபெற்ற அந்த ஃபைனலில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மிரட்டிய குஜராத் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் சீசனிலேயே கோப்பையை வென்றது.

- Advertisement -

சச்சினின் கனவு அணி:
பொதுவாக ஐபிஎல் தொடர் முடிந்தால் அதில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் தங்களுக்கு பிடித்த கனவு அணியை தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது கனவு ஐபிஎல் 2022 அணியை தேர்வு செய்துள்ளார். அதில் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட தவறிய எம்எஸ் தோனி, ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற இந்திய நட்சத்திரங்கள் இடம் பெறவில்லை. இந்த கனவு அணியை பற்றி அவர் பேசியது பின்வருமாறு :

“இதற்குமுன் வீரர்கள் என்ன செய்தார்கள் என்பதை பார்க்காமல் இந்த சீசனில் அவர்களின் செயல்பாடு எப்படியிருந்தது, அவர்கள் என்ன சாதித்தார்கள் என்பதை வைத்தே இது அமைந்துள்ளது” என்று கூறினார். மேலும் தனது கனவு அணியின் 11 வீரர்களையும் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை பற்றியும் சச்சின் பேசி தேர்வு செய்தது பின்வருமாறு.

sachin

கேப்டன் ஹர்டிக் பாண்டியா: இந்த சீசனில் ஹர்திக் சிறந்த கேப்டனாக இருந்தார். அவரது மனதிலும் செயலிலும் தெளிவு இருந்தது. எப்போதும் வருந்தாமல் கொண்டாடுங்கள் என்று நான் கூறுவேன். உங்களால் கொண்டாட முடிகிறது என்றால் உங்களது கேப்டன் எதிரணியை மிஞ்சியுள்ளார் என்று அர்த்தம். அந்தவகையில் ஹர்திக் சிறப்பாக செயல்பட்டார்.

- Advertisement -

ஓப்பனிங் தவான் – பட்லர்: அவர் வேகமாக பேட்டிங் செய்து ஸ்ட்ரைக்கை அற்புதமாக மாற்றினார். ஒரு இடதுகை ஆட்டக்காரர் எப்போதும் பயனுள்ளவர் என்பதுடன் ஷிகர் தவானின் அனுபவமும் உபயோகமாக இருக்கும்.

Jos Buttler vs RCB

என்ன ஒரு அற்புதமான சீசன் அவருக்கு. இந்த வருட ஐபிஎல் தொடரில் அவரை விட வேறு எந்த வீரரும் ஆபத்தான பேட்ஸ்மேனாக எனக்கு தோன்றவில்லை. அவரைப்போல் ஒரு சில வீரர்கள் இருந்தாலும் பட்லருக்கு ஈடாக யாருமில்லை.

- Advertisement -

3 கேஎல் ராகுல்: சீரான ரன்கள் எடுக்கும் கேஎல் ராகுல் எனக்கு மிகவும் பிடித்தவர். சிங்கிள் எடுக்கும் அவர் தேவையான நேரத்தில் சிக்ஸர் அடிக்கும் திறமையும் பெற்றுள்ளார்.

Hardik Pandya GT Vs RR

4 பாண்டியா: ஹர்டிக் பாண்டியா ஒருசில முக்கியமான இன்னிங்ஸில் விளையாடியுள்ளார். ராகுல் போலவே அவரும் சிக்ஸர் அடிக்க நினைத்தால் எளிதாக அடிப்பார். மேலும் அதிரடியாகவும் அழகாகவும் அடிக்கும் பவர் அவரிடம் உள்ளது”

- Advertisement -

5 டேவிட் மில்லர்: இடதுகை பேட்ஸ்மேன்கள் முக்கியம் என்பதால் அவரை இங்கு சேர்த்துள்ளேன். இந்த தொடரில் நிறைய பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் நான் டேவிட் மில்லரை தேர்வு செய்கிறேன். அவர் ஒருசில முக்கிய இன்னிங்சை விளையாடி சீரான ரன்களை அடித்து சூப்பர் பார்மில் உள்ளார். இந்த சீசனில் அவரால் மைதானத்தின் நாலா புறங்களிலும் அடிக்க முடிந்தது பார்ப்பதற்கு சிறப்பாக இருந்தது.

Liam Livingstone

6 லியாம் லிவிங்ஸ்டன்: பெரிய சிக்சர்களை அடிக்கும் திறமை பெற்ற ஆபத்தான பேட்ஸ்மேன். அவர் தன் மீது நம்பிக்கை வைத்து தெளிவான எண்ணங்களைக் கொண்ட 6-வது இடத்தில் பேட்டிங் செய்யும் தகுதியானவர். அதேப்போல் பகுதிநேர பந்து வீச்சாளரான அவரை அதிகம் பந்துவீச நான் கூறுவேன்.

7 தினேஷ் கார்த்திக்: இந்த சீசனில் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டார். அவர் அமைதியாகவும் கட்டுப்பாட்டுடனும் இருந்தார். ஒரு பேட்ஸ்மேன் 360 டிகிரியிலும் அடித்தால் மிகவும் ஆபத்தானவர். அதைத்தான் தினேஷ் கார்த்திக் இந்த சீசனில் செய்தார்.

Dinesh Karthi 66

பவுலர்கள்: ரஷித் கான் ஒரு ஆபத்தான பேட்ஸ்மேன் என்பதையும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். மிடில் ஓவர்களில் விக்கெட் எடுக்கக்கூடிய அவர் 8-வது விளையாடுவதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. உலகிலேயே ஜஸ்பிரித் பும்ரா ஒரு மிகச்சிறந்த டெத் பவுலர். இந்த வருடம் நிறைய புதுமுகங்கள் வந்தாலும் தற்போதைய சூழ்நிலையில் அவர் தான் என்னை பொருத்தவரை சிறந்தவர். அவர் ஆரம்ப கட்டத்தில் இறுதியிலும் எதிர்கொள்ள கடினமானவர்.

அதேபோல் சஹால் இந்த வருடத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர். அவருடன் ரஷித் கான் பந்து வீசுவார் ஒருவேளை இடதுகை பேட்ஸ்மேன் களத்தில் இருந்தால் நான் லியம் லிவிங்ஸ்டனை எடுத்து வருவேன். பாண்டியா என்னுடைய 3-வது வேகப்பந்து வீச்சாளர்.

இதையும் படிங்க : டாஸ் அதிர்ஷ்டம் கிடைச்சும் தப்பு பண்ணிட்டீங்களே – ராஜஸ்தானின் தவறை சுட்டி காட்டும் சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கரின் ஐபிஎல் 2022 கனவு அணி இதோ:
ஷிகர் தவான், ஜோஸ் பட்லர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், லியம் லிவிங்ஸ்டன், தினேஷ் கார்த்திக் (கீப்பர்), ரசித் கான், முகமது சமி, ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

Advertisement