கங்குலி போல பிசிசிஐ தலைவர் ஆகிறேனா? வெளியான செய்திகள் பற்றி சச்சின் டெண்டுல்கர் அறிவிப்பு

Sachin Tendulkar
- Advertisement -

இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ உலகிலேயே மிகவும் அதிக வருமானத்தை ஈட்டும் வாரியமாக திகழ்கிறது. களத்தில் எந்தளவுக்கு இந்தியா அணி சிறப்பாக விளையாடுகிறதோ அந்தளவுக்கு பிசிசிஐக்கு பணம் கொட்டுகிறது என்று சொல்லலாம். மேலும் ஐபிஎல் தொடரின் வாயிலாக மட்டும் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான கோடிகளை சம்பாதிக்கும் பிசிசிஐ ஐசிசிக்கு அதிக வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் வாரியமாகவும் செயல்பட்டு வருகிறது.

அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த பிசிசிஐ வாரியத்தின் முந்தைய தலைவராக ஜாம்பவான் சௌரவ் கங்குலி 2019 முதல் செயல்பட்டு வந்தார். இந்திய அணியை வெற்றிகரமாக வழி நடத்திய கங்குலி பிசிசிஐ தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டார். அவருக்கு அடுத்தபடியாக முன்னாள் இந்திய வீரர் ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவராக செயல்பட்டு வந்தார்.

- Advertisement -

கங்குலி போல சச்சின்:

தற்போது 75 வயது தாண்டி விட்டதால் பிசிசிஐ விதிமுறைப்படி அவர் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அதனால் தற்காலிக பிசிசிஐ தலைவராக துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா செயல்பட்டு வருகிறார். இதை அடுத்து பிசிசிஐ அமைப்பின் புதிய தலைவர் வரும் செப்டம்பர் 28ஆம் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின.

அந்தக் கூட்டத்தில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் செய்திகள் தெரிவித்தன. சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் மற்றும் ரன்கள் அடித்துள்ள சச்சின் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். தோனி, விராட் கோலி போன்ற பலருக்கும் ரோல் மாடலாக திகழும் அவருக்கு பிசிசிஐ அமைப்பில் பெரிய ஆதரவு மற்றும் மதிப்பு இருக்கிறது.

- Advertisement -

சச்சின் மறுப்பு:

எனவே சச்சின் டெண்டுல்கர் போட்டியின்றி பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியானது ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. இந்நிலையில் பிசிசிஐ தலைவராக தாம் பொறுப்பேற்கப் போவதில்லை சச்சின் தெளிவுபடுத்தியுள்ளார். ஊடகங்களில் காணப்படும் வதந்தியான செய்திகள் பற்றி எஸ்ஆர்டி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற தன்னுடைய நிறுவனத்தின் வாயிலாக சச்சின் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு.

இதையும் படிங்க: அமீரகத்திடம் காட்டிய கருணையை.. பாகிஸ்தானுக்கு எதிரா காட்டுவீங்களா? சூரியகுமாரை சாடிய ஆகாஷ் சோப்ரா

“பிசிசிஐ தலைவர் பதவிக்கு திரு. சச்சின் டெண்டுல்கர் பரிசீலிக்கப்படுவது அல்லது பரிந்துரைக்கப்படுவது குறித்து சில அறிக்கைகள் மற்றும் வதந்திகள் பரவி வருவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. அவ்வாறான அபிவிருத்தி எதுவும் இடம் பெறவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். நம்பகத் தன்மை கொடுப்பதை தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

Advertisement