விட்டால் காணாம போய்ருக்கும்.. என் சக்திய வெச்சு பட்டோடி பெயரை காப்பாத்திட்டேன்.. சச்சின் பெருமிதம்

Sachin Tendulkar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் விளையாடும் டெஸ்ட் தொடர் 2007 முதல் பட்டோடி கோப்பை என்றழைக்கப்பட்டு வந்தது. இந்திய அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இப்திகார் அலி கான் பட்டோடி இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 நாடுகளுக்காகவும் கிரிக்கெட்டில் விளையாடி முக்கிய பங்காற்றினார். அவருடைய மகன் மன்சூர் அலி கான் பட்டோடி இந்தியாவின் கேப்டனாக விளையாடி அசத்தினார்.

அவர்களுடைய பங்கை போற்றும் வகையில் 2007 முதல் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் இந்திய டெஸ்ட் தொடர்களை பட்டோடி கோப்பை என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. இருப்பினும் தற்போது அந்த கோப்பைக்கு ஓய்வு கொடுத்துள்ள இங்கிலாந்து சச்சின் டெண்டுல்கர் – ஜேம்ஸ் ஆண்டர்சன் பெயரில் புதிய கோப்பையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் காரணமாக ஜாம்பவான்கள் பட்டோடியின் பெயர் காணாமல் போகவிருந்தது.

- Advertisement -

காப்பாற்றப்பட்ட பட்டோடி பெயர்:

இருப்பினும் அப்போது இங்கிலாந்து வாரியத்திடம் பேசிய சச்சின் டெண்டுல்கர் கோப்பையை வெல்லும் கேப்டனுக்கு பட்டோடி மெடல் எனும் விருதை கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். அதை இங்கிலாந்து வாரியமும் ஏற்றுக்கொண்டது வல்லுனர்களையும் முன்னாள் வீரர்களையும் ஆறுதலடைய வைத்துள்ளது. இந்நிலையில் தம்மால் முடிந்தளவுக்கு முயற்சித்து பட்டோடி அவர்களின் பெயரை இந்தியா – இங்கிலாந்து தொடரில் காப்பாற்றியுள்ளதாக சச்சின் டெண்டுல்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது பற்றி சச்சின் பேசியது பின்வருமாறு. “உங்களிடம் ஒரு முழுமையான விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். முதலில் அந்த கோப்பையை ஓய்வு பெறும் முடிவை எடுத்துவிட்டு தான் பிசிசிஐ மற்றும் இங்கிலாந்து வாரியம் என்னை அணுகினார்கள். பட்டோடி குடும்பத்தைப் பொறுத்த வரை, அவர்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்பைப் பற்றி நான் அறிந்திருக்கிறேன்”

- Advertisement -

சச்சின் பெருமிதம்:

“சீனியர் பட்டோடி இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்காக விளையாடினார். டைகர் பட்டோடி இந்தியாவின் கேப்டனாக செயலபட்டார். நான் பிறக்காததால் அவர்கள் விளையாடுவதை காணவில்லை. ஆனால் அவர்களைப் பற்றிய கதை ஊக்குவிக்கக் கூடியதாக இருக்கிறது. அதனாலேயே அவர்களுடைய மரபு தொடர்ந்து இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்”

இதையும் படிங்க: முன்னாள் ஆஸி ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையை முறியடித்த முஷ்பிகுர் ரஹீம் – விவரம் இதோ

“அதற்காக அவர்களுடைய குடும்பத்தை தொடர்பு கொண்டு பேசிய பின் மிஸ்டர் ஜெய் ஷா, பிசிசிஐ, இங்கிலாந்து வாரியம் ஆகியோருடன் பேசினேன். குறிப்பாக பட்டோடி மரபு நீடிப்பதற்காக ஏதாவது செய்யப்பட வேண்டும் என்று சொன்னேன். என்னுடைய கருத்துக்களைக் கேட்ட அவர்கள் கோப்பையை வெல்லும் கேப்டனுக்கு பட்டோடி மெடலை கொடுக்க முடிவு செய்துள்ளனர். நான் எப்போதுமே எனது சீனியர்களை மதிக்கிறேன். பட்டோடி மரபு இந்தியா – இங்கிலாந்து தொடருடன் தொடர்ந்து இருப்பதை என்பதை உறுதிப்படுத்த என் சக்தியால் எல்லாவற்றையும் செய்தேன்” எனக் கூறினார்.

Advertisement