சச்சினின் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட நாங்க ஒத்துக்குனதுக்கு காரணம் இதுதான் – ரகசியத்தை வெளியிட்ட – மே.இ வாரிய தலைவர்

- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 24 வருடங்கள் விளையாடியவர் 1989 ஆம் ஆண்டு தனது முதல் போட்டியில் விளையாடிய அவர் 2013 ஆம் ஆண்டு தனது கடைசி போட்டியில் இந்தியாவில் ஆடி முடித்தார். மொத்தம் 200 டெஸ்ட் போட்டியிலும் 465 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

- Advertisement -

இவரது கடைசி டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்த டெஸ்ட் தொடர் அவருக்கென்று பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டது என்று தற்போது தெரியவந்துள்ளது.

இது ஒரு வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவர் டேவிட் கேமரூன் சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டுள்ளார் .அவர் கூறுகையில்… பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் எங்களிடம் சச்சின் டெண்டுல்கர் இறுதிப் போட்டியில் ஆட அழைப்பு விடுத்தார். நாங்கள் அதனை ஏற்றுக்கொண்டு இந்தியா வந்து விளையாடினோம்.

sachin
sachin

அதனை தாண்டி 50000டாலர்கள் எங்களுக்கு ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.இதற்காக தற்போது வரை நாங்கள் நன்றி செலுத்துகிறோம்.
குறிப்பாக அந்த தொடரை வேறு நாடு விளையாட வேண்டியதாக இருந்தது. ஆனால் சச்சின் டெண்டுல்கர் 200வது போட்டியாக இருப்பதனால் நாங்கள் உடனடியாக சம்மதம் தெரிவித்தோம்.

sachinspinn

இப்படித்தான் அந்த ஏற்பாடு ஆனது. அவரது கடைசி போட்டியில் விளையாடியது எங்களுக்குத்தான் கவுரவம் என்று தெரிவித்துள்ளார் டேவிட் கேமரூன். சச்சின் கடைசி போட்டியில் பேசிய வார்த்தைகளை கேட்டு வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் மற்றும் கெயில் ஆகியோர் கண்ணீர் வடித்ததாக கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement