6 தோல்விகளின் வேதனை எனக்கும் தெரியும்.. தொடர்ந்து அதை செய்ங்க.. கோலி, ரோஹித்தை ஓய்வுக்கு வாழ்த்திய சச்சின்

Sachin Tendulkar 3
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்றுள்ளது. குறிப்பாக பார்படாஸ் நகரில் ஜூன் 29ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை 2வது முறையாக வென்ற முதல் ஆசிய அணியாக இந்தியா சாதனை படைத்துள்ளது.

அத்துடன் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து ஐசிசி தொடர்களில் சந்தித்த தோல்விகளையும் நிறுத்தியுள்ள இந்தியா புதிய வரலாறு படைத்தது. அதனால் நாடு முழுவதிலும் உள்ள இந்திய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களை கொஞ்சம் சோகமடைய வைத்துள்ளது.

- Advertisement -

சச்சின் வாழ்த்து:
ஏனெனில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக டாப் ஆர்டரில் எதிரணிகளை பந்தாடிய ரோஹித் மற்றும் விராட் கோலி இந்தியாவுக்கு நிறைய மகத்தான வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளனர். மேலும் தற்சமயத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த டாப் 2 பேட்ஸ்மேன்களாவும் சாதனை படைத்துள்ள அவர்கள் கேப்டன்களாகவும் இந்தியாவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

இருப்பினும் 35 வயதை கடந்து விட்டதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அடுத்த தலைமுறைக்கு வழிவிட்டு அவர்கள் இந்த முடிவை அறிவித்துள்ளனர். இந்நிலையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனித்தனியே வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து இந்தியாவுக்காக அசத்த வேண்டுமென்றும் அவர்களுக்கு சச்சின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ரோகித் சர்மா ஒரு இளம் வீரர் முதல் உலகக் கோப்பையை வென்ற கேப்டன் வரை உங்களின் வளர்ச்சியை நான் மிகவும் நெருக்கமாக பார்த்துள்ளேன். உங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் சிறப்பான திறமையும் தேசத்திற்கு மகத்தான பெருமையைக் கொண்டு வந்துள்ளது. டி20 உலகக் கோப்பை வெற்றி என்பது உங்கள் நட்சத்திர வாழ்க்கையின் சரியான உச்சம். வெல்டன் ரோஹித்”

இதையும் படிங்க: பும்ராவுக்கு நிகராக சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த அர்ஷ்தீப்.. டி20 உலகக் கோப்பை உலக சாதனை சமன்

“விராட் கோலி நீங்கள் விளையாட்டின் உண்மையான சாம்பியன். இந்தத் தொடரின் ஆரம்பத்தில் நீங்கள் கடினமான நேரங்களில் கொண்டிருந்தீர்கள். ஆனால் நேற்றிரவு நீங்கள் ஏன் உங்களை இந்த ஜென்டில்மேன் விளையாட்டின் மகத்தான வீரர் என்று சொல்கிறார்கள் என்பதை நிரூபித்துள்ளீர்கள். 6 உலகக் கோப்பைகளில் வேதனை தோல்வியை சந்தித்து கடைசி முயற்சியில் வெற்றி பெறும் அனுபவம் பற்றி எனக்கு நன்றாக தெரியும். இங்கிருந்து நீங்கள் இந்தியாவுக்காக நீண்ட ஃபார்மட்டில் தொடர்ந்து வெற்றியை பெற்றுக் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.

Advertisement