ரிஷப் பண்ட் அதை குருட்டுத்தனமா அடிக்கல.. கில்லுடன் ஹிந்தியில் பேசி மைண்ட் கேம் ஆடிருக்காரு.. சச்சின் பாராட்டு

Sachin Tendulkar
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஜூன் 20ஆம் தேதி லீட்ஸ் நகரில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 101, கேப்டன் சுப்மன் கில் 147, ரிஷப் பண்ட் 134 என 3 பேட்ஸ்மேன்கள் சதத்தை அடித்து அசத்தினார்கள். இருப்பினும் லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்தியா 500 ரன்கள் குவிக்கும் வாய்ப்பை நழுவ விட்டது. மறுபுறம் பந்து வீச்சில் கம்பேக் கொடுத்த அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ், ஜோக்ஸ் டாங் தலா 4 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

- Advertisement -

குருட்டுத்தனம் கிடையாது:

முன்னதாக அந்தப் போட்டியில் ரிஷப் பண்ட் 84 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்த போது இங்கிலாந்தின் சோயப் பஷீர் 96வது ஓவரை பௌலிங் செய்தார். அந்த ஓவரின் முதல் பந்தில் திடீரென ஏபி டீ வில்லியர்ஸ் போல மாறிய ரிஷப் பண்ட் விழுந்து கொண்டே லெக் ஸ்லிப் பகுதியில் பௌண்டரியை பறக்க விட்டார். பேலன்ஸ் இல்லாமலேயே அடித்த அவர் கடைசியில் கீழே விழுந்து எழுந்தார்.

இதற்கு முந்தைய காலகட்டங்களிலும் இதே போல பௌண்டரியை அடித்துள்ள அவர் அப்படி விளையாடி சில முறை அவுட்டும் ஆகியுள்ளார். அதனால் கொஞ்சம் குறுட்டுத்தனமான அதிர்ஷ்டத்துடன் அவர் அந்த பௌண்டரியை அடித்தார் என்றே சொல்லலாம். ஆனால் ரிஷப் பண்ட் மிகவும் திட்டமிட்டு அப்படி விளையாடியதாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

சச்சின் பாராட்டு:

இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் விழுந்து கொண்டே பெடல் ஸ்வீப் அடித்தது எதிர்பாராதது கிடையாது. அது வேண்டுமென்றே புத்திசாலித்தனமாக அடிக்கப்பட்ட ஷாட். அப்படி விழுவதன் வாயிலாக அவரால் பந்துக்கு அடியில் சென்று கட்டுப்பாட்டுடன் லெக் ஸ்லிப்பில் ஸ்கூப் செய்ய முடிந்தது. மேலும் சோயப் பசீர் பவுலிங் சைகையில் நான் சுவாரசியமான ஒன்றை கவனித்தேன்”

இதையும் படிங்க: லண்டன்ல மேட்ச் நடந்தாலும் நேரில் பார்க்க விராட் கோலி வரமாட்டார்.. இந்த முடிவுக்கு என்ன காரணம்? – விவரம் இதோ

“அவர் பவுலிங் செய்கையில் கில் – ரிஷப் ஆகியோர் பந்துகளுக்கு இடையே சத்தமாக இந்தியில் பேசிக்கொண்டார்கள். அது சகஜமானது கிடையாது. பவுலரின் ரிதத்தை தொல்லை செய்வதற்காக அவர்கள் அப்படி பேசி மைண்ட் கேம் விளையாடினர். இது போன்ற சிறிய விஷயங்கள் ஸ்கோர் போர்டில் தெரியாது. ஆனால் ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார். இப்படி சச்சினின் பாராட்டை பெற்றுள்ள ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய கீப்பர் என்ற தோனியின் சாதனையையும் உடைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement