இவரை உங்க ரோல்மாடல்லா நெனச்சுக்கோங்க. உங்களால் சிறப்பாக விளையாட முடியும் – சச்சின் பதிவு

sachin

கரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் தற்போது வரை நீண்டு கொண்டே தான் இருக்கிறது. மேலும், இந்த வைரஸ் தொடங்கியதிலிருந்து உலகம் முழுவதும் பரவியது வரை கிரிக்கெட் கால்பந்து போன்ற குழு விளையாட்டு போட்டிகள் திடீரென்று தள்ளிவைக்கப்பட்டது. கிரிக்கெட் போட்டிகள் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் எந்த ஒரு நாட்டிலும் நடத்தப்படாமல் இருந்தது.

Ind

இதன் காரணமாக உலகம் முழுவதும் இருந்த கிரிக்கெட் வீரர்கள் போட்டிகளில் ஏதுமின்றி பல மாதங்களாக வீட்டிலேயே முடங்கி இருந்தனர். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் அந்த வீரர்களுக்கு எல்லாம் உற்சாகமூட்டும் வகையில் தனது டுவிட்டரில் ஒரு பதிவினை பதிவுசெய்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஜாம்பவான் டான் பிராட்மேன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

அதில் சர் டான் பிராட்மேன் இரண்டாம் உலகப் போரின்போது பல ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்தார். இருந்தாலும் அந்த பல ஆண்டுகள் காத்திருந்து இறுதியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சராசரி வைத்துள்ள வீரராக அவர் மாறி இருக்கிறார்.

அந்த தருணத்தில் பல ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடாமல் வீட்டிற்குள்ளேயே அந்த காலத்தில் இருந்து, மீண்டும் தனது ஆட்டத்தை ஆடி தான் இவ்வாறு பல சாதனைகள் படைத்து இருக்கிறார். தற்போதும் அப்படித்தான் பல மாதங்களாக கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் ஆட முடியாமல் இருக்கிறார்கள்.அவர்கள் அனைவரும் டான் பிராட்மேனை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை நான் அவர்களுக்கு ஒரு கோரிக்கையாக வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் .முன்னதாக 1994 மற்றும் 95 ஆகிய ஆண்டுகளில் கிட்டத்தட்ட 18 மாதங்களில் இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் நடைபெறவில்லை. இது அந்த காலகட்டத்தில் அடிக்கடி நடந்து வந்தது. இதனை எல்லாம் முன் உதாரணமாக வைத்து தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் மீண்டும் களத்திற்கு வந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.