மாபெரும் கெளரவம் வழங்கிய பிசிசிஐ .. 2007இல் ஒய்வு பெற நினைத்து 2011 உ.கோ வென்றது பற்றி சச்சின் நெகிழ்ச்சி

Sachin Tendulkar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் உலகின் மகத்தான பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்துள்ள அவர் 100 சதங்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். 1989இல் 16 வயதில் அறிமுகமான அவர் 24 வருடங்கள் விளையாடி இந்தியாவின் நிறைய சரித்திர வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார்.

மேலும் ஏராளமான இளைஞர்களுக்கு மக்களுக்கும் ரோல் மாடலாக திகழும் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றாலும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். அப்படிப்பட்ட அவருக்கு மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் மிகப்பெரிய கௌரவம் கிடைத்துள்ளது. அதாவது மும்பை வான்கடே மைதானத்தின் ஒரு பகுதியில் பிசிசிஐ தலைமை அலுவலகம் இருக்கிறது.

- Advertisement -

பிசிசிஐ கெளரவம்:

அங்கே உள்ள முதன்மை அலுவலக அறைக்கு “எஸ்ஆர்டி100 – சச்சின் டெண்டுல்கர் 100” என்ற பெயரை சூட்டி பிசிசிஐ கௌரவம் வழங்கியுள்ளது. 100 சதங்கள் அடித்து இந்தியா மற்றும் உலக கிரிக்கெட்டுக்கு பெருமை சேர்த்ததற்காக அவருக்கு பிசிசிஐ இந்த கௌரவத்தை வழங்கியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அந்தக் கௌரவத்தை ஏற்றுக்கொண்டு அறையை திறந்து வைத்த சச்சின் அங்கிருக்கும் 1983, 2011 உலகக் கோப்பையை பார்வையிட்டு புகைப்படங்களில் கையொப்பமிட்டார். அதன் பின் 2011 உலகக்கோப்பை வென்றது பற்றி சச்சின் பேசியது பின்வருமாறு. “இதற்கு முன் இந்த அலுவலகம் கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியாவுக்கு முன்பாக இருந்தது. அந்த இடத்திற்கு சென்றது நினைவிருக்கிறது”

- Advertisement -

சச்சின் நெகிழ்ச்சி:

“அதுவே 1989இல் பாகிஸ்தானுக்கு நான் முதல் முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது பிசிசிஐ அலுவலகமாக இருந்தது. அங்கிருந்து பிசிசிஐ இந்த இடத்துக்கு மாறியுள்ளது அற்புதமான மாற்றமாகும். இந்த விலைமதிப்பற்ற கோப்பைகள் தான் இந்த இடத்தை இன்னும் ஸ்பெஷலாக மாற்றுகிறது. இது நம்முடைய நாடு இந்தக் கோப்பைகளை வெல்ல பிசிசிஐ அலுவலர்கள் மற்றும் நம்முடைய வீரர்கள் வெளிப்படுத்திய முயற்சிகளைக் காட்டுகிறது”

இதையும் படிங்க: ஆர்.சி.பி அணிக்கு தான் கப்.. எழுதிவச்சிக்கோங்க.. அதுக்கு காரணம் இதுதான் – சுரேஷ் ரெய்னா கருத்து

“2007 உலகக் கோப்பைக்கு சென்ற போது எனக்குள் நிறைய எண்ணங்கள் வந்தன. அப்போது தொடர்ந்து விளையாடலாமா விடை பெறலாமா என்று நினைத்தேன். அந்த நேரத்தில் என்னுடைய சகோதரனிடம் பேசினேன். அவர் 2011 உலகக் கோப்பை இந்தியாவிலும் ஃபைனல் மும்பையிலும் நடைபெற உள்ளதாக என்னிடம் சொன்னார். அப்போது கோப்பையுடன் வான்கடே மைதானத்தில் வெற்றி நடை போட வேண்டும் என்பதை கற்பனை செய்தேன். என்னுடைய சகோதரர் அதை சொன்ன போது தான் மீண்டும் என்னுடைய பயணம் துவங்கியது. அந்த 3 வருடங்கள் இந்தக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது மட்டுமே எனது இலக்காக இருந்தது” எனக் கூறினார்.

Advertisement