- Advertisement -
இந்திய கிரிக்கெட்

மும்பைக்காரன் வெளிநாட்டுக்கு போனாலும் இதைத்தான் விரும்புவான் – நியூயார்க்கில் இருந்து சச்சின் வெளியிட்ட பதிவு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான சச்சின் டெண்டுல்கர் 24 ஆண்டுகளாக இந்திய அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல்வேறு வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். அதோடு இந்திய கிரிக்கெட் இன்று இந்த அளவிற்கு வளர்ந்து நிற்பதற்கு மிகவும் முக்கியமான காரணமாக திகழ்வதோடு மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள வீரர்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ்ந்து வருகிறார்.

அந்த அளவிற்கு அவரது ஆட்டம் இன்றளவும் அனைவரது மத்தியிலும் நினைவில் இருந்து வருகிறது. ஒரு நாள் போட்டிகளை பொறுத்தவரை இந்திய அணிக்காக 18,000 அதிகமான ரன்களை குவித்த சச்சின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 15000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.

- Advertisement -

அதேபோன்று ஐபிஎல் தொடரிலும் சில ஆண்டுகளே விளையாடி இருந்தாலும் அதிலும் குறிப்பிடதக்க தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு சென்றிருந்தார். கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றிருந்தாலும் இன்றளவும் கிரிக்கெட் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வரும் சச்சின் டெண்டுல்கர் அவ்வப்போது முக்கிய போட்டிகளை நேரில் கண்டு ரசிப்பது வழக்கம்.

அந்த வகையில் தற்போது இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரில் விளையாடி வரும் வேளையில் அமெரிக்காவிற்கு சென்றுள்ள சச்சின் டெண்டுல்கர் அங்கிருந்து தனது ஓய்வு நேரத்தினை கழித்து வருகிறார்.

- Advertisement -

தற்போது அமெரிக்காவில் இருக்கும் அவர் பொதுவெளிகளில் சென்று சாலையோர கடைகளில் சாப்பிடும் பழக்கத்தையும் வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது சாலையோர கடை ஒன்றில் சாப்பிட்ட சச்சின் அந்த புகைப்படத்தை தனது சமூகவளைதல பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை பகிர்ர்த்துள்ளார்.

இதையும் படிங்க : கயானா மைதானம் அவங்களுக்கே சூட்டாகும்.. அந்த 2 பேரை அடிச்சுட்டா இந்தியா ஈஸியா ஜெயிச்சடலாம்.. ராபின் சிங்

அந்தவகையில் சச்சின் பகிர்ந்ததாவது : “மும்பைக்காரன் எங்கு சென்றாலும் அவனது சாலை உணவை நிச்சயம் விரும்புவான்” என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -