மொத்தம் சம்பளத்தியும் தானமாக வழங்கிய இந்திய அதிரடி வீரர் – யாருக்கு வழங்கினார் தெரியுமா ?

dhoni
- Advertisement -

கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கருக்கு மத்திய அரசு சிறப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கி கௌரவித்தது.

sach

- Advertisement -

கடந்த 2012ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற சிறப்பு நியமன எம்பியாக சச்சின் நியமிக்கப்பட்டார். அவருடைய ஆறாண்டு பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், ஆறாண்டுக்கு நாடாளுமன்ற எம்பியாக பதவி வகித்ததற்கு தான் பெற்ற 90லட்ச ரூபாய் சம்பளத்தை அப்படியே மொத்தமாக பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

இதற்கு முன்னர் சச்சின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது வளர்ச்சி நிதியாக கொடுக்கப்பட்ட 30கோடி ரூபாயில் கல்வி சார்ந்த திட்டங்களுக்காக ரூபாய் 7கோடியும், 25 பள்ளிகளின் கட்டமைப்பை தரம் உயர்த்தவும் செலவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Sachin

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இதே காலகட்டத்தில் இரண்டு கிராமங்களை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார்.

தற்போது தன்னுடைய சம்பளம் முழுதையும் ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் பிரதமரின் நிவாரண பிரிவிற்கு அளித்துள்ளதற்கு பிரதமர் அலுவலகம் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் சச்சினின் சேவையைப் பாராட்டுவதாகவும், ஏழைகளுக்கு இந்த பணம் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement