உலகின் இந்த மைதானத்திலும் இவரால் சிக்ஸர் அடிக்க முடியும். சச்சின் குறிப்பிட்ட அந்த இந்திய வீரர் யார் தெரியுமா ? – விவரம் இதோ

sachin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று நேற்றுடன் ஒரு வருடமானது. இதை அடுத்து “Miss You Yuvi” என்ற ஹேஷ் டேக் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த யுவராஜ்சிங் குறித்த அனுபவங்களையும், அவர்களுக்கு பிடித்த ஆட்டங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

yuvraj 2

- Advertisement -

அந்த வகையில் தற்போது யுவராஜ் சிங் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் பிடித்த தருணம் குறித்து தற்போது அவரது கருத்தை தெரிவித்துள்ளார். அதன்படி இந்திய அணிக்காக 2000மாவது ஆண்டு அறிமுகமான இவர் ஆட்சியில் சச்சின் , கங்குலி , டிராவிட் என பல ஜாம்பவான்களுடன் விளையாடி உள்ளார்.

மேலும் இந்திய அணியின் 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை வெற்றிக்கும், 2011 50 ஓவர் உலகக்கோப்பை வெற்றிக்கும் முக்கிய பங்கு வகித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு பதிவில் ” நான் முதல் முதலில் சச்சினை சந்தித்த போது அவருடன் கைகுலுக்கினேன்”. அப்போது “கடவுளுடன் கைகுலுக்கியதாக உணர்ந்தேன்”. என்று குறிப்பிட்டுள்ளார்.

என் வாழ்க்கையின் கடினமான காலங்களில் நீங்கள் என்னை வழிநடத்தி உள்ளீர்கள். திறமை மீது எப்போதும் உங்களுக்கு நம்பிக்கை உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் சச்சினும் தனது பங்கிற்கு யுவராஜ் குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில் தான் முதல் முறை சென்னையில் யுவராஜ் சிங்கை பயிற்சி சந்தித்ததாகவும் அப்போது இவரது திறமையை புரிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இவரின் சிக்ஸ் அடிக்கும் திறமையை சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் உலகின் எந்த மைதானமாக இருந்தாலும் இவரால் எளிதாக சிக்ஸர் அளிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement