இவரை மட்டும் நம்பி இந்திய அணி இல்ல. இன்னொரு முறை அப்படி சொல்லாதீங்க – சச்சின் ஓபன் டாக்

sachin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மிகப்பெரிய கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது முடிவடைந்த நிலையில் வரும் 17ம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையே அடிலெய்டு மைதானத்தில் துவங்கவுள்ள டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடைபெற இருக்கிறது.

INDvsAUS

- Advertisement -

இந்த போட்டி முடிந்த பின்னர் இந்திய அணி கேப்டன் விராட்கோலி நாடு விரும்புவதால் இந்த போட்டியின் மீது உள்ள எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் விராட் கோலி விளையாட மாட்டார் என்பதினால் ஆஸ்திரேலிய அணி எளிதில் வெற்றி பெறும் என அனைவரும் வருகின்றனர். மேலும் இந்திய அணியில் கோலி இல்லாமல் அது ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக அமையும் என்றும் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் தனது கருத்தினை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : கோலி மாதிரியான அனுபவ வீரர் பேட்டிங் லைனில் இல்லாதது இந்திய அணிக்கு பாதகம் தான் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதே நேரத்தில் இந்திய அணி ஒருவரை நம்பி விளையாடுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

kohli

கிரிக்கெட் என்பது 11 பேரும் சேர்ந்து விளையாடும் விளையாட்டு எந்தவொரு அணியும் தனி ஒருவரைச் சார்ந்து ஒரு அணி இருக்க முடியாது. அதனை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் கோலி இல்லாத இடத்தை இளம் வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அதற்கான பலமும் நம்மிடம் இருக்கிறது. அது மட்டுமின்றி நம்மிடம் தற்போது வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு, பேட்டிங் என அனைத்து விடயங்களும் ஸ்ட்ராங்காக உள்ளது.

indvsaus

இதனால் இந்த தொடரை கைப்பற்ற இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். கடந்த முறை ஆஸ்திரேலிய நாட்டிற்கு 2017 – 18 ல் சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி 71 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement