கோலி இல்லாததை விட இவர் இல்லாததுதான் இந்திய அணிக்கு ஏற்பட்ட பெரிய இழப்பு – சச்சின் கருத்து

sachin
- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இரு அணி வீரர்களும் கடந்த சில தினங்களாகவே தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த நவ்.17 முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்ட்டில் பகலிரவு போட்டியாக நடைப்பெற்றது. அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 244 பெற்றிருந்தாலும் இரண்டாவது இன்னிங்சில் வெறும் 36 ரன்கள் மட்டும் எடுத்து படுமோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

indvsaus

- Advertisement -

ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தனது முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், மனைவியின் கர்ப்பகாலத்தில் நான் அருகில் இருக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவித்தபடி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியுடன் விலகியுள்ளார்.

இதைதொடர்ந்து, முதல் டெஸ்ட் இரண்டாவது இன்னிங்சில் 21.1 ஓவரை வீசிய பாட் கம்மின்ஸ் பந்தை எதிர்கொள்ள முடியாமல் முகமது ஷமி தவிர்த்து வந்தார். அதில் ஒரு பவுன்சர் பந்தை எதிர்கொண்ட முகமது ஷமியின் கை மணிக்கட்டில் அடிபட்டது. இதனால் அவர் தொடர்ந்து பேட்டிங் செய்ய முடியாமல் பெவிலியன் திரும்பினார். இதனைத்தொடர்ந்து, முகமது ஷமியை பரிசோதித்த மருத்துவர்கள் மேற்கொண்ட ஸ்கேனில், எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

Shami 2

இதனால் முகமது ஷமியும் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ள முகமது ஷமி குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் கூறுகையில் “ முகமது ஷமி இந்திய அணியின் ஒரு அங்கமாக திகழ்பவர். முகமது ஷமி மிகச் சிறந்த பந்துவீச்சாளர். இதில் எந்த சந்தேகமும் கிடையாது. கண்டிப்பாக இந்திய அணி முகமது ஷமியின் பங்கை 100% மிஸ் செய்யும்.

Shami

கடந்த போட்டிகளில் முகமது ஷமி தனது ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தி இந்திய அணிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். முகமது ஷமி இல்லாதது இந்திய அணிக்கு மாபெரும் இழப்பு. அவருக்கு ஏற்றார்போல் இந்திய அணி சிறந்த பந்துவீச்சாளர் ஒருவரை தேர்வு செய்து விளையாட வேண்டும்” என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

Advertisement