ரோஹித்துக்குள் சேவாக் இருப்பதை நான் பார்க்கிறேன். தொடர்ந்து ரோஹித் சிறப்பாக விளையாட இதை செய்தால் மட்டும் போதும் – சச்சின் பேட்டி

Rohit sehwag
- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோஹித் ஷர்மா 176 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்நிலையில் ரோகித் சர்மா குறித்து பேட்டி ஒன்றினை அளித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் கூறியதாவது :

Faf 1

- Advertisement -

ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் சிறப்பான துவக்க வீரராக விளையாடி வருகிறார் மேலும் அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பதால் அவரால் டெஸ்ட் போட்டியிலும் துவக்க இடத்தில் சிறப்பாக விளையாட முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும் பல ஆண்டுகள் இந்திய அணிக்காக அவர் துவக்க வீரராக விளையாடி வரும் அனுபவம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் சிறப்பாக விளையாட கை கொடுக்கும் என்று நம்புகிறேன்.

மேலும் சேவாக் இங்கிலாந்து அணிக்கு எதிராக துவக்க வீரராக களமிறங்கிய முதல் போட்டியில் சதமடித்தார். அவர் டெஸ்ட் போட்டி ஒருநாள் போட்டி என்று பிரித்து பார்ப்பது கிடையாது. அவருடைய இயல்பான ஆட்டமாக அதிரடி ஆக்ரோஷமான ஆட்டத்தை அவர் எப்போதுமே விளையாடுவார். அதனால் டெஸ்ட் போட்டியில் அவரால் சிறந்து விளங்க முடிந்தது. மேலும் அவர் மனநிலையை எப்போதும் மாற்றிக் கொண்டதில்லை.

Rohit-2

அதனை போன்று ரோகித் சர்மாவும் டெஸ்ட் போட்டிகளில் அவர் அவருடைய இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டும் போதும் அவர் நீண்ட காலம் சிறப்பாக விளையாட முடியும் மேலும் அவ்வப்போது கடினமான சூழ்நிலையில் நேரமும் ஏற்படலாம் ஆனால் அதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல் நம் மன நிலையை சீராக வைத்துக் கொண்டு நம்முடைய இயல்பான ஆட்டத்தை விளையாடினால் சிறப்பாக விளையாட முடியும் என்பதே என் கருத்து என்று சச்சின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement