ரவி சாஸ்திரிய கிண்டல் செய்யும் நம்மில் பலருக்கும் தெரியாத தகவலை கூறிய – சச்சின் டெண்டுல்கர்

Shastri-1
- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 1989ம் ஆண்டிலிருந்து ஆடிவருகிறார். மொத்தம் 24 ஆண்டுகள் இந்திய அணிக்காக ஆடி கிரிக்கெட்டில் மறக்க முடியாத பல சாதனைகளை படைத்துள்ளார். நேற்று முன்தினம் அவர் தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
உலகெங்கிலும் உள்ள விளையாட்டு வீரர்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

sachin

- Advertisement -

அதே நேரத்தில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் உடன் ஒரு தொலைக்காட்சி ஒன்றில் கலந்துரையாடிக் கொண்டிருந்தார். அப்போது தன்னுடைய முதல் போட்டி பற்றிய பல தகவல்களையும், இளமைக்காலத்தில் தான் எப்படி கிரிக்கெட் ஆடினார் என்பது குறித்தும் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர்…

1989 ஆம் ஆண்டில் நான் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்கினேன். அப்போது வக்கார் யூனிஸ் மற்றும் வாசிம் அக்ரம் ஆகியோர் தாறுமாறாக பந்து வீசிகொண்டிருந்தனர். முதல் ஆட்டத்தில் வெறும் 15 ரன்களில் ஆட்டமிழந்தேன். எனக்கு 16 வயது ஆகி இருந்தாலும் அன்று ஒரு பள்ளி மாணவனைப் போல் நான் ஆடினேன். பந்துகள் என் உடம்பிலும் பட்டது.

sachin

ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பியபோது, நொந்து போனேன். கழிவறைக்கு சென்று அழுது கொண்டிருந்தேன். அதன் பின்னர் இதுதான் நான் இந்தியாவிற்காக விளையாடும் கடைசி போட்டி என்று நினைக்கும் அளவிற்கு சென்று விட்டது.

- Advertisement -

அப்போது தான் ரவிசாஸ்திரி என்னிடம் வந்து எனக்காக பேசினார். கவலைப்படாதே இதுதான் என்னுடைய கடைசி போட்டி என்று மட்டும் நினைத்து விடாதே. ஆடுகளத்தில் நேரத்தை செலவிடு. அப்போதுதான் அவர்கள் பந்துவீச்சை உன்னால் புரிந்து கொள்ள முடியும் என்று கூறினார். இதன் பின்னர் அவருடைய அறிவுரைப்படி அடுத்த போட்டியில் 59 ரன்கள் விளாசினார் இவ்வாறு கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

shastri

இதுவரை இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை அவரது உடலமைப்பை வைத்து ரசிகர்கள் கேலி செய்து வந்த நிலையில் சச்சின் கூறிய இந்த நெகிழ்ச்சி சம்பவத்தினால் அவரை பாராட்டி கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement