நான் பாத்த 20 வருஷமும் அங்க கொஞ்சம் கஷ்டம். உஷாரா இருங்க. இந்திய வீரர்களை எச்சரித்த – சச்சின்

sachin1
- Advertisement -

நியூசிலாந்து நாட்டிற்கு கிரிக்கெட் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் நாளை மறுதினம் 24ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் இரு பிரிவுகளாக நியூஸிலாந்து கிளம்பியுள்ளனர்.

kuldeep

அதன்படி கோலி தலைமையிலான ஒரு பிரிவு அணியினர் நேற்று பெங்களூரில் இருந்து புறப்பட்டனர். இன்னொரு பிரிவு வீரர்கள் இன்று புறப்பட உள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் நியூசிலாந்து ஆடுகளங்கள் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது : சமீபகாலமாக நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற அனைத்து டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுக்கக்கூடிய போட்டிகள் ஆகவே அமைந்தன.

- Advertisement -

ஆடுகளத்தின் தன்மை முன்பைப் போல பந்துவீச்சுக்கு ஒத்துழைக்காமல் பேட்டிங்கிற்கு ஒத்துழைப்பாக காணப்படுகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் எனக்கு நன்றாக ஞாபகம் உள்ளது. அந்த தொடரில் ஹேமில்டன் ஆடுகளம் தவிர நியூசிலாந்தின் மற்ற ஆடுகளங்களை விட முற்றிலும் மாறுபட்டு இருந்தது. அதேபோன்று நேப்பியர் ஆடுகளம் எப்போதும் விளையாடுவதற்கு கடினமாக இருக்கும்.

ground napier

ஏனெனில் 1990 முதல் 2009 வரையான நியூஸிலாந்து பயணத்தின்போது நேப்பியர் ஆடுகளம் விளையாடுவதற்கு மிகக் கடினமாக இருந்தது. தற்போதைய இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சு என இருபுறமும் சமமாக இருப்பதால் நியூசிலாந்து அணியை அதன் மண்ணில் வீழ்த்த தேவையான பலமும் இந்திய அணியிடம் உள்ளது என்றே நான் நினைக்கிறேன். இந்தத் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது என்றும் சச்சின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement