கோலியும், யூசுப் பதானும் என்னை தோளில் சுமந்தபோது நான் அவர்களிடம் கூறியது இது ஒன்றுதான் – சச்சின் ஓபன்டாக்

Sachin

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் 6 உலக கோப்பை தொடர்களில் இந்திய அணிக்காக பங்கேற்றுள்ளார். கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் கிரிக்கெட் உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய சச்சின் கிரிக்கெட்டில் படைக்காத சாதனையே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு எண்ணற்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார். 1996 உலகக் கோப்பையில் தனி ஒரு ஆளாக இந்திய அணியை அவர் கொண்டு சென்றார்.

sachin

2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை இந்திய அணி செல்ல முக்கிய காரணமாகும் திகழ்ந்தார். அதுமட்டுமின்றி 2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதையும் பெற்று அசத்தியிருந்தார். அதற்கடுத்து 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக விளங்கிய சச்சின் அந்த தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தினார்.

- Advertisement -

இப்படி தனது கிரிக்கெட் கேரியரில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து உள்ள சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் கேரியரில் தான் மறக்க முடியாத நாள் என்ன என்பது குறித்து அவர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : 1983ஆம் ஆண்டு கபில்தேவ் இந்திய அணிக்காக உலகக் கோப்பையை வென்று கையிலேந்தியதும் அதைப் பார்த்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

sachincup
sachin

அப்போது நான் மற்றும் எனது நண்பர்கள் என அனைவரும் அந்த வெற்றியை கொண்டாடினோம். அப்போது நான் இதே போன்று ஒரு நாள் உலகக் கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என்று நினைத்தேன். அது மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது என்னால் மறக்க முடியாத ஒன்று என்னுடைய கிரிக்கெட் கேரியரிலேயே மிகச் சிறந்த நாள் எது என்று கேட்டால் நான் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கையில் ஏந்திய அந்த தருணம் தான் என்று கூறுவேன்.

sachin

- Advertisement -

அந்த வெற்றி இந்திய அணிக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல இந்திய நாட்டிற்கே கிடைத்த வெற்றியாகவும் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது என சச்சின் டெண்டுல்கர் கூறினார். மேலும் யூசப் பதான் மற்றும் விராட் கோலி ஆகியோர் சச்சினை தோளில் சுமந்து சுமந்து குறித்து பேசிய அவர் கூறுகையில் : போட்டி முடிந்து நாங்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது கோலியும், யூசுப் பதானும் என்னை தோள் மேல் தூக்கி வைத்து மைதானத்தை வலம் வந்தனர். அப்போது நான் அவர்களிடம் என்னை கீழே விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று மட்டும்தான் கூறியதாகவும் சச்சின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement