இந்த ஒரு பாட்டை கேட்டுத்தான் என் மனசு மாறிச்சி. அப்புறம் டபுள் செஞ்சுரி அடிச்சேன் – சச்சின் பகிர்ந்த தகவல்

sachin
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ரன் மழை பொழிந்தவர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் என இரண்டு வகை சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் உடைய சாதனைகளுக்கு அளவில்லை. அந்த அளவு ஏகப்பட்ட சாதனைகளை அவர் சர்வதேச அரங்கில் படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 34 ஆயிரத்து 347 ரன்களை விளாசியுள்ளார். அதுமட்டுமின்றி 100 சதங்களை அடித்துள்ளார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை என அனைத்து நாடுகளிலும் அவர் சதம் அடித்துள்ளார். சச்சின் களத்தில் நின்றால் எதிரணி கொஞ்சம் ஆட்டம் காணுவதை நாம் பலமுறை கண்டுள்ளோம். அதற்கு காரணம் அவரது மிகச் சிறப்பான பேட்டிங் தான். இந்நிலையில் சச்சின் தான் தடுமாறிய ஒரு கட்டத்தில் ஒரு பாடலை கேட்டு மீண்டும் தான் சிறப்பான பார்மிற்கு திரும்பியதாக தற்போது ஒரு நிகழ்வினை பகிர்ந்துள்ளார்.

அதன்படி கங்குலி தலைமையிலான இந்திய அணி 2003 மற்றும் 2004 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது பிரிஸ்பேன், அடிலெய்டு மற்றும் மெல்போன் ஆகிய டெஸ்ட் போட்டிகளில் சொதப்பிய டெண்டுல்கர் கடைசியாக நடைபெற்ற சிட்னி டெஸ்ட் போட்டியின் போது 241 ரன்களை விளாசி இருப்பார்.

Sachin

இந்நிலையில் அதற்கு காரணம் அந்த ஒரு பாடல்தான் எனக் கூறியுள்ள சச்சின் இதுகுறித்து கூறுகையில் : அந்த தொடரில் 3 டெஸ்ட் போட்டிகளில் நான் சரியாக விளையாடவில்லை. எனக்கு நம்பிக்கை கொடுத்தது ஒரு பாடல்தான். டிரெஸ்ஸிங் ரூமில், ஹோட்டலில், பயணத்தின் போது, மைதானத்தில் என அனைத்து இடத்திலும் நான் “சம்மர் ஆப் 69” என்ற பாடலைக் கேட்டுக்கொண்டே இருந்தேன்.

sachin6

அதன் மூலம் கிடைத்த நம்பிக்கையிலேயே நான் அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடி 241 ரன்களை சேர்த்தேன் என தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி 2003ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் போது லக்கி அலியின் sur ஆல்பத்தை கேட்டதாகவும் தெரிவித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். அந்த தொடரில் சச்சின் 673 ரன்கள் குவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement