Sachin : எனது மகன் இந்திய அணியில் நேராக இடம்பிடிக்க எனக்கு விருப்பமில்லை – சச்சின் ஓபன் டாக்

இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 24 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி பல சாதனைகளைப் படைத்துள்ளார். அவரின் பல சாதனை

sachinarjun
- Advertisement -

இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 24 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி பல சாதனைகளைப் படைத்துள்ளார். அவரின் பல சாதனைகளை பலரும் நெருங்கவே சிரமப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு சாதனைகளை தன்வசம் குவித்து வைத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

sachin

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு மகன் உள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது அவர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணியில் இடம் பிடித்து உள்ளூர் டி20 போட்டிகளில் தற்போது ஆகாஷ் டைகர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். எனவே இவர் சச்சினின் ஆதரவோடு இந்திய அணியின் விரைவில் இடம் பிடிப்பார் என்று பலர் கருதுகின்றனர்.

ஆனால் இதற்கு எதிர்மறையாக சச்சின் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் சச்சின் கூறியதாவது : என் மகனிடம் நான் கிரிக்கெட் வீரராக நீ ஆக வேண்டும் என்று ஒருபோதும் கூறியது கிடையாது. எந்த துறையாக இருந்தாலும் அது உனக்குப் பிடித்திருந்தால் அதனை தேர்ந்தெடு மேலும் அந்தத் துறையில் நீ நியாயமான வழியில் முன்னேறுவது தவிர குறுக்கு வழியை ஒரு போதும் உபயோகிக்க கூடாது என் தந்தை என்னிடம் கூறிய அதே வார்த்தைகளை தற்போது நான் என் மகனிடம் கூறியுள்ளேன் என்று சச்சின் கூறினார்.

arjunn

எனவே தனது மகனுக்காக அவர் எந்த உதவியும் இந்திய அணி நிர்வாகத்திடமிருந்து எதிர்பார்க்க மாட்டார் என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது. தனது மகன் திறமை இருந்தால் அணியில் இடம் பிடிக்கட்டும் இல்லை என்றால் மற்ற வீரரைப் போல அவரும் கடினப்பட்டு இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பது போல சச்சின் பேட்டி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஜுன் டெண்டுல்கர் தனது தந்தை போல பேட்ஸ்மேனாக மட்டுமில்லாமல் இடதுகை ஆல்ரவுண்டராக விளையாடிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement