- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தமுறை தவறு செய்தால் நான் விளையாடவே மாட்டேன். எனது கிரிக்கெட் வாழ்வின் முதல் திருப்புமுனை இதுதான் – சச்சின் நெகிழ்ச்சி

இந்திய அணியின் சாதனை நாயகனான சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்களால் இன்றளவும் அழைக்கப்பட்டு வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் என்ற பெருமையை உடையவர்.

இந்நிலையில் தற்போது தனது முதல் முறை துவக்கவீரர் குறித்த அனுபவத்தினை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அதன்படி சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 100 சதங்களுடன் 34357 ரன்களை குவித்துள்ள சச்சின் கிரிக்கெட் களத்தில் ஒரு மிகப் பெரிய சாம்ராஜ்யத்தையே நடத்தியவர் என்றால் அது மிகையல்ல.

- Advertisement -

தனது கேரியரில் தொடக்கத்தில் மிடில் ஆர்டரில் இறங்கியதும் அதன்பின்னர் தொடக்க வீரராக அவர் புரிந்த சாதனைகள் அனைத்தும் நாம் அறிந்ததே. தற்போது முதல் முறையாக தனது துவக்க வீரர் அனுபவத்தைப் பகிர்ந்த சச்சின் கூறியதாவது : 1994 ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்ற சுற்றுப்பயணத்தின்போது ஆக்லாந்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியின்போது நாள் காலையில் விளையாடுவதற்காக தயாராகிக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது நான் துவக்க வீரராக களமிறங்க போகிறேன் என்பது எனக்கு தெரியாது. மைதானத்துக்கு சென்றதும் கேப்டன் அசாருதீன் மற்றும் அஜித் வடேகர் டிரெஸ்ஸிங் ரூமில் துவக்க வீரர் சித்திக்கு உடம்பு சரியில்லை என்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவருக்கு பதிலாக யாரை களமிறக்குவது அவர்கள் என்று அவர்கள் ஆலோசனை செய்த போது நான் எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்கள் நான் கண்டிப்பாக நன்றாக ஆடுவேன் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று அவரிடம் கூறினேன்.

- Advertisement -

மேலும் இந்த முறை சரியாக ஆடாவிட்டால் அடுத்த முறை இந்த வாய்ப்பை நான் கேட்கவே மாட்டேன் என்று கூறினேன். அதன் பிறகு அந்த போட்டியிலேயே 49 பந்துகளில் 82 ரன்களை நான் குவித்தேன் என்று சச்சின் டெண்டுல்கர் கூறினார். அந்த அந்த காலகட்டத்தில் துவக்க வீரராக களமிறங்கும் ஒருவர் முதலில் பந்துகளை சமாளித்து ஆடி விட்டு பிறகு அதிரடியாக ஆடுவார்கள்.

ஆனால் சச்சின் துவக்கம் முதலே நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை சிதறடித்து அதிரடியாக ரன் குவித்தார். அதன் பிறகு அவர் துவக்க வீரராக படைத்த சாதனைகள் அனைத்துமே இன்றுவரை ஒரு வரலாறுதான்.

- Advertisement -
Published by