ஐ.சி.சி யின் யோசனைக்கு கங்குலியை தொடர்ந்து தனது அதிரடி கருத்தை ஓபனாக சொன்ன சச்சின் – விவரம் இதோ

Sachin

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆன ஐசிசி தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிந்ததும் அடுத்த 2023 ஆம் ஆண்டு முதல் அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

ind 1

மேலும் அந்த தொடரில் டெஸ்ட் போட்டிகளில் நான்கு நாட்கள் நடைபெறும் இது குறித்த விவரங்கள் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று ஐசிசி தெரிவித்திருந்தது. இந்நிலையில் அது குறித்து ஏற்கனவே கங்குலி தெரிவித்த கருத்தில் : இதனை திட்டமிட்டு ஆராய்ந்தால் தான் தெரியும் மற்றபடி இப்பொழுது எந்த கருத்தையும் கூற முடியாது என்று ஒரு கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் இதுகுறித்து கூறியதாவது : டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றம் கொண்டுவருவது சரியல்ல. பாரம்பரியமான டெஸ்ட் போட்டி இவ்வாறு நடைபெறுகிறதோ அதேபோன்று தொடர்ந்து நடைபெற வேண்டும். அதில் எந்தவித மாற்றமும் கொண்டுவரக் கூடாது என்று கூறினார்.

IND

மேலும் அப்படி 5 நாட்களில் இருந்து 4 நாட்களாக குறைத்தால் பேட்ஸ்மேனின் பார்வையில் இது ஒரு நாள் கிரிக்கெட்டில் நீட்சியாகத்தான் தெரியும். இது தவிர டெஸ்ட் கிரிக்கெட் ஆக அது பார்க்கப்படாது மேலும் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின்போது இன்னும் இரண்டு அரைநாள் தான் இருக்கின்றது என்ற எண்ணம் வரும். அது வீரர்களின் சிந்தனையும் ஆட்டத்தையும் மாற்றி விடும் என்றும் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -