MS Dhoni : கேப்டன் கோலியாக இருந்தாலும், இந்த வெற்றி முழுவதும் இவருக்கு மட்டுமே சொந்தம் – சச்சின்

Sachin
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 34ஆவது போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின.

ind vs wi

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கோலி 72 ரன்களை குவித்தார். தோனி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 56 ரன்களை குவித்தார்.

பின்னர் 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவர்களில் 143 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஷமி சிறப்பாக பந்து வீசி 16 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பும்ரா மற்றும் சாஹல் ஆகியோர் 2 விக்கெட் வீழ்த்தினர்.

Dhoni

இந்நிலையில் நேற்றைய போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : இந்த போட்டியில் கோலி கேப்டன்சியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தாலும் இந்த வெற்றியில் முழுப்பங்கும் தோனியையே சாரும் அவர் பேட்டிங் இறங்கும் போது இந்திய அணி இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது. அவர் பொறுமையாக இறுதிவரை ஆடி அணியின் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து அணியை இறுதியில் நல்ல இலக்கிற்கு எடுத்துசென்றார்.

Dhoni 1

கடைசி ஓவரில் 16 ரன்கள் குவித்து பேட்டிங்கை தக்கவைத்துக்கொண்டார். அவர் செய்த அந்த விடயம் சிறப்பான ஒன்றாகும் இதனாலேயே வெற்றி கிடைத்தது என்று சச்சின் கூறினார். ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோனி மெதுவாக விளையாடினார் என்று விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement