இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை ஜெயிக்கவும், தோற்கவும் இவங்க 3 பேரால தான் முடியும் – சச்சின் பேட்டி

sachin
- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியும், டி20 தொடரில் இந்திய அணியும் தொடரை கைப்பற்றியது. மீதமுள்ள 4 டெஸ்ட் போட்டிகளில் முதல் போட்டி வருகின்ற 17ம் தேதி அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டுமென்று தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

INDvsAUS

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது முதல் டெஸ்ட் போட்டியுடன் நாடு திரும்புவதாக கூறியுள்ளார். மனைவியின் கர்ப்பகாலத்தில் அவருடன் இருப்பதற்கு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார் விராட் கோலி. இதனால் மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் ரஹானே தலைமையில் இந்திய அணி செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து பேசியிருக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில், இந்திய அணி 2-1 என பார்டர்-கவாஸ்கர் டிராபியை கைப்பற்றி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்று சாதனை படைத்திருந்தது. இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் கூறுகையில் :

warnersmith

“ கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்களான டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், ஆகிய இருவரும் பந்தை சேதப்படுத்தியதன் காரணமாக தடைக்காலத்தில் இருந்ததால் அணியில் இடம்பெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு அவர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். இது ஆஸ்திரேலிய அணிக்கு மாபெரும் பலத்தை சேர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த முறை இந்த டெஸ்ட் தொடர் கடினமாக தான் இருக்கும்.

smith

ஆஸ்திரேலியாவின் ஸ்மித், வார்னர் மற்றும் லபுசேன் ஆகிய மூவரும் டெஸ்ட் தொடரை மாற்றி அமைக்கப் போகின்றனர். இதனால் இந்திய அணிக்கே மாபெரும் அச்சுறுத்தல் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. எனவே இந்திய அணி இவர்களை துல்லியமாக எதிர்கொள்ள வேண்டும்” என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

Advertisement