சச்சின் மற்றும் சேவாக் அவுட் ஆன பிறகு ,ட்ரெஸிஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது என்பதை கம்பிர் தற்போது வெளியிட்டுள்ளார்.

gambir

2011ம் ஆண்டின் இந்தியா – இலங்கையிடையேயான உலகக்கோப்பை இறுதிபோட்டி அது. முதலில் ஆடிய இலங்கை அணியானது ஐம்பது ஓவர்களின் முடிவில் 6விக்கெட் இழப்பிற்கு 274 ரன்களை குவித்தது. பின்னர் 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்தது. ஆட்டத்தின் முதல் ஓவரின் இரண்டாம் பந்தை மலிங்கா வீசிட அதனை அடித்தாட முயன்று எல்.பி.டபில்யூ ஆகி சேவாக் வெளியேற கம்பீர் அடுத்ததாக களம் இறங்குகின்றார்.
gambhir1
மீண்டும் ஆறாவது ஓவரின் முதல் பந்தை மலிங்கா வீசிட சச்சின் இம்முறை சங்ககராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேற ஒருகட்டத்தில் முப்பத்தி ஓரு ரன்கள் எடுக்கும் முன்னரே கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகிய இருவரும் மலிங்கா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து வீரர்கள் ஓய்வெடுக்கும் அறைக்கு நடையை கட்ட, இந்திய வீரர்களின் உடைமாற்றிடும் அறையில் ஒரு இனம்புரியாத கலக்கம் எட்டிப்பார்க்கின்றது.

பின்னர் கம்பீர் மற்றும் விராட்கோலி தங்களது பொறுப்புணர்ந்து நிதானமாகவும் நேர்த்தியாகவும் விளையாடிட மூன்றாம் விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்து 84 ரன்களை சேர்த்தது.விராட்கோலி தில்ஷான் வீசிய 21வது ஓவரில் நான்காவது பந்தை அடித்தாட முற்பட்டு அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆகிட அணியின் ஸ்கோர் 21.4 ஓவரில் 3விக்கெட் இழப்பிற்கு 114 என்று இருந்தது.

Sachin

பின்னர் கவுதம் கம்பீர், கேப்டன் தோனியுடன் ஜோடி சேர இருவரின் அட்டகாசமான ஆட்டம் இந்தியாவை வெற்றி பாதையை நோக்கி அழைத்து செல்ல கவுதம் கம்பீர் 97ரன்கள் எடுத்து சதத்தை நோக்கி முன்னேறி கொண்டிருந்த வேளையில் பெரேராவிடம் போல்டாகி துரதிர்ஷ்டவசமாக 3ரன்களில் உலகக்கோப்பை இறுதியில் சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

கவுதம் கம்பீரும்,தோனியும் இணைந்து நான்காவது விக்கெட்டிற்கு 109 ரன்களை குவித்தது.
பின்னர் யுவராஜ்சிங்குடன் தோனி இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டுசெல்ல 48.2 ஓவர்களில் தோனியின் வின்னிங் ஷாட் சிக்சருடன் 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்றது.

இறுதிப்போட்டியில் கேப்டன் தோனி அவுட் ஆகாமல் 91ரன்களை குவித்தார். கவுதம் கம்பீர் எடுத்த 97 ரன்கள் தான் இந்தியா வெற்றிபெற முக்கியமாக அமைந்தது அந்த ஆட்டத்தில்.2011 உலகக்கோப்பையை வென்ற அந்த நிமிடங்களில் வீரர்களின் மனநிலை உடைமாற்றிடும் அறையில் எப்படி இருந்தது என்பதனை விவரிக்கின்றார் கவுதம் கம்பீர்.

இலங்கை நிர்ணயத்தை 275 ரன்களான வெற்றி இலக்கை அடைய விளையாட ஆரம்பித்த இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் சேவாக் அவுட்டாகிட, உடைமாற்றிடும் அறையில் அமர்ந்திருந்த எனக்கும் மற்ற வீரர்களுக்கும் பயம் அதிகரித்தது. அடுத்து நான் களமிறங்க கூட தயாராகிடாத நிலையில் வேகவேகமாக அடுத்து களமிறங்க மைதானத்தை நோக்கி ஓடினேன்.

dhoni

நான் மைதானத்தில் களமிறங்கி ஆடிய முதல் பந்து முதல் நான் எதிர்கொண்ட கடைசி பந்து வரையிலும் இந்த போட்டியில் எப்படியாவது வென்று உலகக்கோப்பையை கைப்பற்றிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டே விளையாடினேன்.களத்தில் நின்று விளையாடிய எங்களை விட உடைமாற்றிடும் அறையிலிருந்த ஓவ்வொரு வீரர்களுமே எப்படியாவது நாம் வென்றுவிட வேண்டும் என்றே நாற்காலியின் நுனியில் பதற்றத்துடன் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தனர்.

உலகக்கோப்பை போட்டியில் அதுவும் இறுதிப்போட்டியில் 275 ரன்களை துரத்தி வெற்றிபெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.அத்தனையையும் தாண்டி நாங்கள் வெற்றி பெற்று உலகக்கோப்பையை தட்டி தூக்கிய அந்த நிமிடமானது வாழ்க்கையில் என்றுமே மறக்கமுடியாத ஒரு நிகழ்வு என்று தனது மகிழ்ச்சியை பற்றி கூறினார்.