என்னுடைய வாழ்வில் இதுபோன்ற நிகழ்வை பார்த்ததே இல்லை.நீங்களே பாத்துட்டு நல்லதொரு முடிவை சொல்லுங்கள் – சச்சின் குழப்பம்

Sachin
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று ஒரு வீடியோ ஒன்றினை பகிர்ந்தார். அந்த வீடியோவில் ஒரு பேட்ஸ்மேன் விளையாடும்போது போல்டாகி பைல்ஸ் கீழே விழாதவாறு அந்த வீடியோ உள்ளது. இதோ அந்த வீடியோ :

அந்த வீடியோவை பதிவிட்ட சச்சின் குறிப்பிட்டதாவது : என்னுடைய நண்பர் எனக்கு பகிர்ந்த வீடியோ இது. இதுபோன்ற ஒரு விசித்திரமான வீடியோவை நான் பார்த்ததே கிடையாது. நீங்கள் அம்பயராக இருந்தால் உங்களுடைய முடிவு என்ன என்பது போல அந்த வீடியோவை பகிர்ந்து அதில் குறிப்பிட்டார்.

- Advertisement -

இந்த வீடியோவை கண்ட பலரும் சச்சின் பகிர்ந்த இந்த வீடியோ குறித்த தங்களது கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். மிகவும் குழப்பமாக இருக்கும் இந்த விக்கெட் அவுட்டா இல்லையா என்பது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை குறிப்பிட்டு இந்த வீடியோவினை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement