இனி சச்சின் கூட ஒரு கான்ஸ்டபிளும் இருக்கக்கூடாது. பாதுகாப்பை வாபஸ் பெற்ற மாநில அரசு – விவரம் இதோ

Sachin

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் இந்தியாவின் மிக முக்கியமான நபராக பார்க்கப்படுகிறார். மேலும் கௌரவ எம்பி பதவி வைத்திருக்கும் அவருக்கு எந்த நேரத்திலும் அவருடன் பாதுகாப்பிற்காக ஒரு குழு இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு “எக்ஸ்” பிரிவு பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

sachin 1

அதன்படி சச்சினுடன் ஒரு கான்ஸ்டபிள் 24 மணி நேரமும் உடன் இருப்பார். அதுவே சச்சினுக்கு இதுநாள் வரை வழங்கப்பட்ட ஒரு பாதுகாப்பு குழுவாகும். இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா தலைமையில் புதிய ஆட்சி தற்போது அமைந்துள்ளது. இந்த நிலையில் சச்சினுக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்பினை ரத்து செய்துள்ளது மகாராஷ்டிர மாநில அரசு.

மேலும் இந்த மாநிலத்தில் உள்ள பிரபலமானவர்கள் அரசியல்வாதிகள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் சிறப்பு பாதுகாப்பை மாற்றி அமைத்துள்ளது. எனினும் சச்சின் வெளியே செல்லும்போது அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது சச்சின் ரசிகர்களிடையே சற்று புகைச்சலை ஏற்படுத்தியது. இதன் பின்னால் அரசியல் உள்ளது எனவும் சிலர் புகார் கூறி வருகின்றனர்.

Sachin

ஏனெனில் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனுக்கு “ஒய் பிளஸ்” பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு “இசட்” பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சச்சினுக்கு “எக்ஸ்” பிரிவு பாதுகாப்பு நீக்கியுள்ளது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. மேலும் சமூக ஆர்வலரான அன்னா ஹசாரேவுக்கு வழங்கப்பட்டிருக்கும் “இசட்” பிரிவு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -