இவரது ஆட்டத்தை பக்கத்தில் இருந்து பாத்துள்ளேன். பிரச்சனை இல்லை – நம்பிக்கை அளித்த சச்சின்

Sachin
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு போட்டியாக துவங்க உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இவ்விரு அணிகளுக்கும் இது முக்கியமான தொடர் என்பதால் இரு அணிகளுமே வெற்றி பெற்று தொடரை முன் நிலையை அடைய ஆர்வம் காட்டும். இதனால் இத்தொடரின் மீது உள்ள எதிர்பார்ப்பு இப்போதே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

INDvsAUS

- Advertisement -

அதேபோன்று இந்த முதல் டெஸ்ட் போட்டியுடன் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி நாடு விரும்புவதால் அடுத்த மூன்று போட்டிகளுக்கு ரஹானே கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஹானேவின் கேப்டன்சி குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் பல கருத்துகளை தெரிவித்து வருகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ரஹானே குறித்த சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : ரகானே அணியை வழிநடத்தி செல்வதை இதற்கு முன்னர் நான் பார்த்துள்ளேன். அவர் ஆக்ரோஷமாக இருந்தாலும் அந்த ஆக்ரோஷத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என தெரிந்தவர். அது மட்டுமின்றி அவரின் ஆட்டத்தை நான் அவருடைய பக்கத்திலிருந்து பார்த்துள்ளேன். அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொள்வதில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

எனவே அவர் நிச்சயம் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துவார். அதிலும் அதுமட்டுமின்றி கடினமான உழைப்பை களத்தில் அர்ப்பணிப்பாக கொடுத்து உறுதியுடன் விளையாடும் வீரர் ரகானே என்று சச்சின் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் : கிரிக்கெட் என்பது ஒரு தனிநபரை சார்ந்தது அல்ல என்றும் இதில் 11 பேரில் கூட்டு முயற்சியும் நிச்சயம் அவசியம் என்று கூறியுள்ளார்.

இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் டெப்த் உள்ளது. அதனால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும். அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் ஆர்டரும் கடைசி முறையைக் காட்டிலும் இம்முறை அனுபவம் வாய்ந்ததாக உள்ளது என சச்சின் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement