எனது மகனுக்கும் மகளுக்கும் இருக்கும் பிரச்சனையை தீர்த்து வையுங்கள் – சச்சின் கோரிக்கை

Arjun

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் தற்போது கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். மும்பை அணிக்காக விளையாடி வரும் இவர் 19 வயதுக்குட்பட்ட மற்றும் 21 வயதுக்கு உட்பட்ட போட்டிகளில் விளையாடி வருகிறார்.

ArjunTendulkar

கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட போட்டிகளிலும் இந்திய அணி சார்பில் அர்ஜுன் டெண்டுல்கர் வெளியாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. தந்தையைப் போலவே அர்ஜுன் டெண்டுல்கர் கிரிக்கெட் களத்தில் துடிப்போடு விளையாடி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சாரா டெண்டுல்கர் போன்ற பெயர்களில் அதாவது சச்சின் மகன் மற்றும் மகள் பெயர்களில் போலி ட்விட்டர் அக்கவுண்ட் துவங்கப்பட்டு சில சர்ச்சைக்குரிய பதிவுகள் அதில் பதிவு செய்யப்பட்டும் வருகின்றன.

இதுகுறித்து தற்போது சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : என்னுடைய மகனுக்கும் மகளுக்கும் ட்விட்டர் கணக்குகள் இல்லை. ஆனால் தற்போது அவர்கள் இருவரது பெயரிலும் போலியான கணக்குகள் உருவாக்கப்பட்டு அதில் இருந்து சர்ச்சையான கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

ஆகவே இந்த கணக்கை உடனடியாக நீக்குமாறு இந்தியாவின் ட்விட்டர் நிர்வாகத்திற்கு வேண்டுகோளை வைக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சச்சின் டெண்டுல்கரின் மகன் மற்றும் மகள் ஆகியோரது போலி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கிரிக்கெட்டில் நாட்டம் செலுத்தி வரும் அர்ஜூன் டெண்டுல்கர் விரைவில் இந்திய அணியில் இடம் பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -