நான் ஓய்வு பெற்ற அன்று லாரா மற்றும் கெயில் அளித்த பரிசு இதுதான் – 7 ஆண்டுகள் கழித்து மனம்திறந்த சச்சின்

Sachin-2
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வீரரும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து பிரியாவிடை பெற்றார். மேலும் தான் விளையாடிய 200வது போட்டியில் சச்சின் 74 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் இவரால் இரண்டாவது இன்னிங்சில் விளையாட முடியவில்லை.

sachin

- Advertisement -

1989 ஆம் ஆண்டு அறிமுகமாகி 2013ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடிய இவர் கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாக வலம் வந்த சச்சின் மும்பை வாங்கடே மைதானத்தில் தனது இறுதிப் போட்டியின் போது ரசிகர்களின் புடைசூழ ஓய்வு பெற்று வெளியேறினார்.

இந்நிலையில் தற்போது 7 ஆண்டுகள் கழித்து அன்றைய நாளில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் லாரா மற்றும் கெயில் ஆகியோர் அளித்த நினைவு பரிசு குறித்து தற்போது முதன்முறையாக மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் :

sachin 1

என் மீது மதிப்பும் அன்பும் வைத்திருக்கும் மேற்கு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு என்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன். எனக்கு என் நண்பர்கள் அளித்த அன்புப் பரிசு இந்த ஸ்டீல் ட்ரம் தான் என்று அதனை வீடியோ பதிவாக சச்சின் வெளியிட்டுள்ளார். எனது நண்பர்கள் அளித்த இந்த மிகச்சிறந்த பரிசுக்கு நன்றி.

அவர்களின் அன்புக்கும் மரியாதைக்கும் என்றும் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 24 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடிய சச்சின் மொத்தம் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15921 ரன்களை குவித்துள்ளார் அதில் 51 சதங்கள் மற்றும் 68 அரைசதங்கள் அடங்கும்.

Advertisement