எனது 24 வருட கிரிக்கெட் வாழக்கையில் மிகச்சிறந்த தொடர் இதுதான் – முதன்முறையாக மனம்திறந்த சச்சின்

- Advertisement -

இந்திய அணிக்காக 24 வருடங்கள் விளையாடியவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்று போற்றப்படும் இவர் கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கப்படுகிறார். மொத்தம் 200 டெஸ்ட் போட்டிகள், 463 ஒருநாள் போட்டிகளில், 78 டி20 போட்டிகளில் விளையாடி பல சாதனைகள் படைத்து இருக்கிறார். இவரது பெயரில் எக்கச்சக்க சாதனைகள் இருக்கிறது. இவர் படைக்காத பேட்டிங் சாதனைகளே இல்லை என்று கூறலாம்.

sachin

- Advertisement -

தனது 24 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் ஏராளமான சறுக்கல்கலையும், வெற்றி தோல்விகளையும் சந்தித்து இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். இப்படிப் வெற்றி பெற்ற பல டெஸ்ட் தொடர்களில் எது மிகச்சிறந்த டெஸ்ட் தொடர் என்பது பற்றி பேசியிருக்கிறார். அவர் கூறுகையில் …

2001-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அப்போது அந்த அணிக்கு ஸ்டீவ் வாக் கேப்டனாக இருந்தார். அதுதான் தனக்கு கடைசி இந்திய டெஸ்ட் தொடர் என்றும் கூறியிருந்தார். அதேபோல் எங்களது அணிக்கு சொந்த மண்ணில் விளையாடுவதால் நெருக்கடி இருந்தது. வெற்றி பெற்றே ஆக வேண்டும்.

எங்கள் அணிக்கு எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு இந்த டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலிய அணிக்கு முக்கியமாக இருந்தது. மும்பையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின்னர் கொல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ராகுல் டிராவிட் மற்றும்  லட்சுமணன் ஆகியோர் திடீரென அற்புதமாக விளையாடி இந்திய அணி வெற்றி பெற வைத்தார்கள்.

dravid

சென்னையில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் வென்று தொடரை மிக எளிதாக கைப்பற்றினோம் எனது வாழ்க்கையில் நான் விளையாடிய மிகச்சிறந்த டெஸ்ட் தொடர் இதுதான் என்று எப்போதும் கூறுவேன் என்று தெரிவித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

Advertisement