பிராட்மேனின் 111 ஆவது பிறந்தநாளில் பிராட்மேன் பற்றி யாருக்கும் தெரியாத தகவலை வெளியிட்ட – சச்சின்

Sachin
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் டான் பிராட்மேன் 1908-ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி பிறந்தார். அவர் கிரிக்கெட் விளையாட அடி எடுத்து வைக்கும்போது ஆஸ்திரேலிய அணி புகழின் உச்சத்திற்கு சென்றது.

bradman

ஆஸ்திரேலிய அணி வீரராகவும், கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்ட பிராட்மேன் டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்சமாக சராசரியான (99.94) என்ற சராசரி வைத்துள்ளார். அவரின் இந்த சாதனையை இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் முறியடிக்க முடியாது என்பது மறுக்கப்படாத உண்மை. அவரின் 111வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் பிராட்மேனை அனைவரும் சிறந்த பேட்ஸ்மேனாக மட்டும்தான் உங்களுக்குத் தெரியும். ஆனால் அவர் நகைச்சுவை உணர்வு பத்தி எனக்கு தெரியும். ஏனென்றால் நான் அதை அனுபவித்து இருக்கிறேன்.

1992 ஆம் ஆண்டு அவருடன் செலவிட்ட சில மணி நேரங்களில் நான் அதை அனுபவித்தேன் என்று பிராட்மேனுடன் உள்ள புகைப்படத்தை சர்ச்சின் பதிவிட்டுள்ளார். கடந்த 1998-99 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்தது. அந்த தொடரில் சச்சின் இந்திய அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியா சென்று இருந்தார். அப்போது ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் வார்னே மற்றும் சச்சின் ஆகியோர் பிராட்மேனின் சிறப்பு அழைப்பின் காரணமாக பிராட்மேனின் இல்லத்திற்கு விருந்திற்காக சென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement