சச்சினின் காலில் விழுந்த விராட் கோலி. அதற்கு சச்சின் என்ன செய்தார் தெரியுமா ? – சுவாரசிய தகவல் இதோ

Sachin

இந்திய அணியின் தற்போதைய கேப்டனான விராட் கோலி 2008ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அணியின் கேப்டனாக தலைமை தாங்கி வழி நடத்திய கோலி உலக கோப்பையை வென்ற விரைவிலேயே இந்திய அணியில் இடம்பிடித்து விளையாட தொடங்கினார். அப்போது விராட் கோலி தவிர அணியில் இருந்த மற்ற அனைவரும் சீனியர் வீரர்கள் இருந்தனர்.

virat kohli

குறிப்பாக சச்சின், சேவாக், கம்பீர், தோனி, யுவராஜ் போன்ற சீனியர் வீரர்களுக்கு இடையில் கோலி இளம் வீரராக விளையாடினார். இந்நிலையில் அப்போது முதன்முறையாக சச்சினை சந்தித்த விராட் கோலி அவரின் காலில் விழுந்த சம்பவம் பற்றி தற்போது சச்சின் தனது அனுபவத்தினை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அப்போது இருந்த அணியில் யுவராஜ், முனாப் படேல், இர்பான் பதான் ஆகியோர் கோலியிடம் சென்று நீ அணியில் புதிதாக சேர்த்து இருக்கிறாய் புதிதாக வரும் வீரர்கள் டெண்டுல்கர் இடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்று கிண்டலாக ஜாலியாக தெரிவித்துள்ளனர். இதனை அப்படியே நம்பிய விராட் கோலி உடனே சென்று சச்சின் டெண்டுல்கரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார்.

sachin

இதனை சற்றும் எதிர்பார்க்காத டெண்டுல்கர் கோலியிடம் ஏன் இது மாதிரி செய்தாய் நீ என் காலில் விழுவது எனக்கு சுத்தமாக பிடிக்காது என்று சச்சின் தெரிவித்திருக்கிறார். உடனே அருகில் இருந்த யுவராஜ், பதான், பட்டேல் ஆகிய வீரர்கள் சத்தமாக சிரித்துள்ளனர் அதற்குப் பிறகுதான் கோலியை அவர்கள் பிராங்க் செய்துள்ளது தெரிந்துள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பேசிய சச்சின் கூறுகையில் :

- Advertisement -

sachin 1

விராட் கோலியை நான் முதல் முறை பார்க்கும்போது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நேரடியாக வந்து என் காலில் விழுந்தார். நான் அதற்கு என்ன செய்கிறாய் ? இது எனக்கு பிடிக்காது என்றேன் உடனே அருகில் இருந்த வீரர்கள் சிரிக்க ஆரம்பித்தனர். அப்போது தான் அவர்கள் விராட் கோலியை கிண்டல் செய்து இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியவந்தது. ஆனாலும் விராட் கோலி அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

Advertisement