என்னுடைய 24 வருட சர்வதேச கிரிக்கெட் நான் தவறவிட்ட 2 விஷயம் இதுதான் – சச்சின் வெளிப்படை

உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக விளங்கிய இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரான சச்சின் டெண்டுல்கர், தனது 24 வருட கிரிக்கெட் பயணத்தில், தான் அனுபவித்த பல சுவாரஸ்யமான தருணங்களை தற்போது பேட்டியாக அளித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் தான் மிகவும் எதிர்பார்த்த இரண்டு விடயங்களைப் பற்றியும், அந்த நிகழ்வுகள் அவருடைய வாழ்க்கையில் நடைபெறாமல் போனதால் அதிக மனவருத்தம் அடைந்ததாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,

Sachin 1

என்னுடைய வழ்க்கையில் இரண்டு விடயங்களுக்காக நான் மிகவும் வருந்தினேன். அதில் ஒன்று, நான் ஒரு முறைகூட சுனில் கவாஸ்கருடன் இணைந்து விளையாடியதே இல்லை. கிரிக்கெட்டில் அவர்தான் என்னுடைய கதாநாயகன். அவரைப் பார்த்து தான் நான் வளர்ந்தேன். ஆனால் அவருடன் இணைந்து விளையாட முடியாமல் போனதை இப்போது நினைத்தால்கூட எனக்கு வருத்தத்தைத் தான் அளிக்கிறது என்று அவர் கூறினார்.

- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் 1989ஆம் ஆண்டு தனது பதினாறு வயதில் இந்திய அணிக்காக அறிமுகமானார். ஆனால் அதற்கு இரண்டு வருடங்களுக்கு (1987) முன்பாகவே சுனில் கவாஸ்கர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்பதால் சச்சினால் அவருடன் இணைந்து விளையாட முடியாமல் போனது. தனது மற்றொரு வருத்தத்தை வெளிப்படுத்திய சச்சின்,

gavaskar

என்னுடைய சிறுவயது ஹீரோவான சர் விவியன் ரிச்சர்ட்ஸ்க்கு எதிராக விளையாட முடியாமல் போனதுதான் என்னுடைய இன்னொரு வருத்தமாக இருக்கிறது. நான் அவருக்கு எதிராக கவுண்ட்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருந்தாலும், அவருக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பாக இருந்தது என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

viv

சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக அறிமுகமான பின்னர், இரண்டு ஆண்டுகள் கழித்து தான் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வை முடிவை அறிவித்தார். ஆனால் இந்த இரண்டு ஆண்டுகளில் சர்வதேச போட்டிகளில் ஒரு முறைகூட அவரை எதிர்த்து சச்சின் டெண்டுல்கர் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement