என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டி உங்களால் தான் சிறப்பாக அமைந்தது – மனம்திறந்த சச்சின்

sachin
- Advertisement -

இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரக்யான் ஓஜா அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 33 வயதாகும் போது ஓஜா கடைசியாக டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

ojha

அதன் பிறகு இந்திய அணியில் அவர் விளையாடவில்லை. 2009 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக கான்பூர் டெஸ்டில் அறிமுகமான ஓஜா 5 ஆண்டுகள் இந்திய டெஸ்ட் அணிக்கு விளையாடி 24 போட்டிகளில் 113 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான அவர் நான்கு ஆண்டுகள் வரை விளையாடி 18 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஓஜா 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காததால் தற்போது அவர் சர்வதேச மற்றும் முதல் தரப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ஓஜாவின் இந்த ஓய்வு குறித்து சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது : உங்களால் எனது கடைசி டெஸ்ட் போட்டி சிறப்பாக அமைந்தது. அந்த போட்டியில் 10 விக்கெட் எடுத்து அசத்தியதால் அந்த போட்டி எனக்கு சிறப்பாக இருந்தது. மேலும் இரண்டாவது இன்னிங்ஸ்க்கு வரவேற்கிறேன் நண்பரே என்று சச்சின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement