இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடந்தது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 416 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியின் சார்பாக விகாரி சதம் அடித்து அசத்தினார்.
அதன்பின்னர் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் 117 ரன்களில் சுருண்டது. பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 168 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் இந்திய அணிக்கு 468 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்கை கடக்க முடியாமல் 210 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் தொடரையும் 2 – 0 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
Congratulations to Team India on a fabulous series win.
It’s been a joy to watch @Jaspritbumrah93 in this series. His hat-trick was special and the progress he has made in Test cricket has been absolutely terrific.#WIvsIND pic.twitter.com/OvbvoTJUk0— Sachin Tendulkar (@sachin_rt) September 2, 2019
இந்திய அணிக்கு இந்த தொடரை வென்றதற்காக எனது வாழ்த்துக்கள். பும்ரா பந்துவீச்சு இந்த தொடரில் சிறப்பாக இருந்தது. அவரது ஹாட்ரிக் மற்றும் டெஸ்ட் பந்துவீச்சு இந்த தொடரில் சிறப்பாக இருந்தது என்றும் அவரது பந்துவீச்சை காண மகிழ்ச்சியாக இருந்தது என்றும் சச்சின் தெரிவித்தார்.