சிறுவர்களுடன்…ரோடு ஓரத்தில் கிரிக்கெட் விளையாடிய சச்சின் – வைரலாகும் வீடியோ

sachin

கிரிக்கெட் உலகின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் மும்பை பகுதியில் ஒரு மெயின் ரோட்டில் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.மும்பையிலுள்ள முக்கிய சாலை ஒன்றில் இரவு நேரத்தில் ஒருபுறம் வாகனங்கள் சென்றுகொண்டிருக்க மறுபுறம் சில இளைஞர்களுடன் “ஸ்ட்ரீட் கிரிக்கெட்” விளையாடியுள்ளார்.

https://www.facebook.com/sreejith.an.3/videos/1880009465402784/

உலகின் புகழ்பெற்ற அனைத்து மைதானங்களிலும் விளையாடி பல சாதனைகளை புரிந்து புகழின் உச்சத்தில் இருந்த ஒருவர் சாதாரண இளைஞர்களோடு எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் விளையாடிய அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.சமூகவலைத்தளங்களில் இந்த வீடியோ காட்டுத்தீயை விட வேகமாக பரவிவருகின்றது தற்போது.

- Advertisement -

தான் கிரிக்கெட் உலகின் கடவுள் என்பதுபோன்ற எந்தவொரு பந்தாவும் காட்டிடாமல் சிரித்துக்கொண்டே “ஸ்ட்ரீட் கிரிக்கெட்” விளையாடிய அந்த வீடியோ இதோ உங்களுக்காக..

Advertisement