கிரிக்கெட் உலகமே சச்சினை திரும்பி பார்த்த தினம் இன்றுதான். ஆகஸ்ட் 14 மற்றும் சச்சினுக்கும் இடையே உள்ள தொடர்பு – என்ன தெரியுமா ?

Sachin
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஜாம்பவான் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக பல சாதனைகளை படைத்துள்ளார். மேலும் பல உலக சாதனைகளைத் தன் கையில் வைத்திருக்கும் சச்சினின் முக்கிய சாதனை யாதெனில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் ஆகிய இரண்டிலும் சேர்த்து 100 சதங்களை அடித்துள்ளார்.

Sachin

- Advertisement -

இந்த சாதனையை முறியடிக்க கோலி மட்டுமே தற்போது ரேஸில் உள்ளார். அவரை தவிர வேறு யாரும் இந்த சாதனையை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்ற அளவிற்கு அபாரமான சாதனை தன் வசம் வைத்துள்ளார் டெண்டுல்கர். கடந்த 2013 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து டெண்டுல்கர் ஓய்வு பெற்றார்.

கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் கிரிக்கெட் மைதானத்தில் தன் வாழ்க்கையைக் கழித்த சச்சின் டெண்டுல்கர் இன்றளவும் ரசிகர்களின் மத்தியில் நீங்காத அன்பையும், ஆதரவையும் பெற்றுள்ளார் இந்திய கிரிக்கெட் என்றாலே நம் நினைவுக்கு ஞாபகம் வருது சச்சின் டெண்டுல்கர் தான். இந்நிலையில் 29 ஆண்டுகளுக்கு முன்பு சச்சின் இதே நாளில் ஆகஸ்ட் 14ஆம் தேதி தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார் என்பது உங்களுக்கு தெரியுமா.

ஆம் 1989 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக சர்வதேச போட்டியில் சச்சின் அறிமுகமானார். அந்த தொடரில் அவர் சதம் அடிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து 1990 ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதத்தை பதிவு செய்தார். அந்த போட்டியில் அவர் 119 ரன்கள் அடித்து இந்திய அணி அந்த போட்டியை டிரா செய்ய முக்கிய காரணமாக அமைந்தார்.

சச்சின் தனது முதல் சதம் அடித்த தினம் ஆகஸ்ட் 14 எனவே சச்சினால் இந்த நாளை எப்போதும் மறக்க முடியாது. இதனை சிறப்பிக்கும் வகையில் ஐ சி சி மற்றும் பி சி சி ஐ ஆகியவை சச்சினின் புகைப்படத்தை தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. தனது 17வது வயதில் லிட்டில் மாஸ்டர் சச்சின் முதல் சதத்தை பதிவு செய்த சச்சின் அதன் பிறகு 100 சதங்கள் அடித்து கிரிக்கெட் உலகை மிரளவைத்தது நாம் அறிந்ததே.

Advertisement