சச்சின் ஒன்னும் சும்மா டான் ஆகல. அவரோட பிராக்டீஸ் பாருங்க

sachin6
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் 100 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை டெண்டுல்கர் வைத்துள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டுவரும் சச்சின் நேற்று அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கிரிக்கெட் மீது உள்ள ஆர்வத்தாலும் காதலாலும் தான் பயிற்சி செய்த விதத்தை வீடியோவாக பதிவிட்டுள்ளார். இது அவருடைய பழைய விடியோவாக இருந்தாலும் அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

அந்த வீடியோவில் நீர் தேங்கி இடத்தில் சச்சின் டெண்டுல்கர் பந்துகளை அடிக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இவ்வளவு சிரமப்பட்டு அவர் பயிற்சியை செய்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement