நியூசியிடம் அவரோட இன்னிங்ஸ் முக்கியம்.. வருண் இந்தியாவுக்கு வெற்றியை கொடுத்துட்டாரு.. சச்சின் பாராட்டு

Sachin Tendulkar
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களது முதல் 2 போட்டிகளில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை எளிதாக தோற்கடித்தது. அந்த சூழ்நிலையில் மார்ச் இரண்டாம் தேதி துபாயில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களது கடைசி லீக் போட்டியில் விளையாடியது. 2019 உலகக் கோப்பை செமி ஃபைனல் உட்பட ஐசிசி தொடர்களின் வரலாற்றில் இந்திய அணிக்கு நியூசிலாந்து எப்போதுமே சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறது.

அதனால் இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு நியூசிலாந்து சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போல முதலில் பேட்டிங் செய்த இந்தியாவை அதிரடியாக விளையாட விடாத நியூஸிலாந்து 249-9 ரன்களுக்கு மடக்கியது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 79, ஹர்டிக் பாண்டியா 45, அக்சர் படேல் 42 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

இந்தியா போராடி வெற்றி:

நியூஸிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளை நிறுத்தினார். அடுத்ததாக விளையாடிய நியூசிலாந்துக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற வகையில் இந்தியா பவுலிங் செய்தது. அதையும் தாண்டி நம்பிக்கை நட்சத்திரம் கேன் வில்லியம்சன் 81 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்தார். இறுதியில் 45.3 ஓவரிலேயே நியூசிலாந்தை 205 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியாவுக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு முக்கியப் பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். முன்னதாக இந்தப் போட்டியில் ரோகித், கில், விராட் கோலி ஆகியோர் ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 30/3 என தடுமாறிய போது சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் – அக்சர் படேலுடன் சேர்ந்து 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 79 ரன்கள் குவித்து இந்தியாவை காப்பாற்றினார்.

- Advertisement -

சச்சின் பாராட்டு:

கடைசியில் பாண்டியா அதிரடியாக 45 (45) ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார். இந்நிலையில் இப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் முக்கியமான இன்னிங்ஸ் விளையாடியதாக ஜாம்பவான் சச்சின் தெரிவித்துள்ளார். மேலும் வருண் சக்கரவர்த்தி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்ததாகவும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி சச்சின் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: அக்சர் பட்டேலின் காலில் விழச்சென்ற விராட் கோலி.. தடுத்து நிறுத்திய அக்சர் படேல் – என்ன நடந்தது?

“ஸ்ரேயாஸ் ஐயர் மிகவும் முக்கியமான இன்னிங்ஸ் விளையாடினார். வருண் சக்கரவர்த்தியின் ஸ்பெல் இந்தியாவின் கையை ஓங்கியிருக்க வைத்ததை உறுதி செய்தது. அணியாக இது நமக்கு நல்ல வெற்றி” என்று பதிவிட்டுள்ளார். அடுத்ததாக மார்ச் 4ஆம் தேதி இந்தியா தங்களுக்கு செமி ஃபைனல் போட்டியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

Advertisement