ஸ்மித்தை அவுட்டாக இப்படி பந்துவீசினாலே போதும் – இந்திய பவுலர்களுக்கு டிப்ஸ் கொடுத்த சச்சின் டெண்டுல்கர்

Sachin

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், டி20 தொடர் மற்றும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்னும் சில தினங்களில் துவங்க இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த தொடருக்காக இரு அணியை சேர்ந்த வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

INDvsAUS

இந்நிலையில் இந்த தொடர் குறித்து பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும், முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான ஸ்டீவ் ஸ்மித்தை எவ்வாறு எளிதாக வீழ்த்துவது என்பது குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து வீசும்போது பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சற்றுத்தள்ளி நான்காவது ஸ்டம்பில் பந்து வீச வேண்டும். ஆனால் ஸ்மித் போன்ற பேட்ஸ்மேன்கள் எப்பொழுதும் நகர்ந்து நகர்ந்து ஆடுவதால் அவர்களுக்கு எதிராக அதுபோன்று பந்து வீசுவது தவறான ஒன்று.

Smith 1

நான்காவது ஸ்டம்பில் இருந்து சில இன்ச்சுகள் வெளியே வீசும் பொழுது அதாவது 5ஆவது ஸ்டம்பில் வீசும் பொழுது ஸ்மித்தை எளிதாக ஆட்டமிழக்க செய்ய முடியும். மேலும் அவருக்கு எதிராக பந்துவீசும் போது வீரர்களின் மனநிலை அவரை வீழ்த்துவது மட்டுமே என்பது போல சற்று மெண்டல் அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால் அவரை அழுத்தத்திற்கு உள்ளாக்கி அவரது விக்கெட்டை எளிதாக பெறமுடியும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

- Advertisement -

Smith

இந்த தொடரில் சீனியர் வீரர் இஷாந்த் சர்மா இன்னும் இணையவில்லை என்றாலும் பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ் போன்ற முன்னணி வீரர்களும், சைனி மற்றும் சிராஜ் போன்ற இளம் வீரர்களும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தங்களது அதிவேக தாக்குதலை நடத்த காத்திருப்பது குறிப்பிடத்தக்கவை.