ஒருநாள் போட்டியில இந்த ரூல்ஸ் மட்டும் கொண்டுவாங்க. அப்புறம் எந்த பிரச்சனையும் வராது – ஐ.சி.சி க்கு சச்சின் அறிவுரை

sachin
- Advertisement -

கொரோனா வைரஸ் உமிழ் நீரின் மூலமாக பரவுகிறது. இதன் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் கொரோனா வைரஸ் வந்துவிடாமல் இருக்க உமிழ் நீரைக் கொண்டு பந்தை தேய்ப்பதை தடை செய்ய ஐசிசி முடிவு செய்தது. கும்ளே தலைமையிலான குழு இதனை நிர்ணயம் செய்து, ஐசிசி இடம் ஒப்படைக்க, ஐசிசி பந்தில் உமிழ் நீரை தேய்க்க தடைசெய்தது.

ballswing

- Advertisement -

வரும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இது அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிராட் லி ஆகியோர் ஒரு நேரலையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இந்த தலைப்பு வந்தது. அதில் பேசிய சச்சின் டெண்டுல்கர் பந்துவீச்சாளர்கள் பந்தில் உமிழ்நீரை ஐசிசி பயன்படுத்துவதை ஐசிசி தடை செய்துள்ளது.

அதே நேரத்தில் வியர்வையை பயன்படுத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இது சற்றுக் கடினம்தான். ஏனெனில் குளிர்காலத்தின் போது டெஸ்ட் போட்டிகள் விளையாடபட்டால் அந்த நேரத்தில் வியர்வை சுரக்காது. பகலிரவு ஆட்டங்களில் இரவு நேரத்தில் அதிக பனி பொழிவு ஏற்படும். இது பந்துவீசும் அணிக்கு கூடுதல் சாதகமாகத்தான் இருக்கும். நாம் ஒரு விதியைக் கொண்டு வரலாம் ஆனால் அந்த விதி காலநிலைக்கு ஏற்றதாகயிருக்க வேண்டும் என்று கூறினார் சச்சின்.

இதற்கு பதிலளித்த பிரட் லீ….. உமிழ்நீரை தடை செய்தது எல்லாம் சரிதான். ஆனால் அதற்கு மாற்றுப் பொருளாக ஏதாவது ஒரு வேதிப்பொருளை ஐசிசி கொடுக்க வேண்டும். அப்போதுதான் பந்தை சரியான நேர்த்தியில் வைக்க முடியும் என்று கூறினார்.

- Advertisement -

மேலும் சச்சின் டெண்டுல்கர் பேசுகையில் இதற்கு மாற்றுக் கருத்தாக ஒவ்வொரு 50 ஓவருக்கும் 2 பந்துகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் 85 ஓவர்களுக்கு ஒருமுறைதான் புதிய பந்துகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு 50 ஓருக்கும் இரண்டு பந்துகள் கொடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

ricket-ball

ஐ.சி.சி யின் இந்த புதிய விதிமுறை குறித்து பலரும் பல கருத்துக்களை கூறிவரும் நிலையில் பிரெட் லீ மற்றும் சச்சின் ஆகிய இருவரும் கூறிய இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement