IND vs WI : ஷமியா ? புவியா ? குழப்பத்தில் கோலி. இவரை தேர்ந்தெடுங்கள் ஐடியா கொடுத்த – சச்சின்

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை

Shami-2
- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி நான்கு வெற்றிகளையும், நியூசிலாந்துடனான மழையால் நின்ற போட்டியில் ஒரு டிரா என 9 புள்ளிகளில் உள்ளது.

Bhuvi

இந்திய அணி அடுத்ததாக 27ஆம் தேதி மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது. நாளை நடைபெற உள்ள போட்டிக்காக இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் நாளைய போட்டிக்கான இந்திய அணி குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி நாளைய போட்டியில் ஷமியை தேர்வு செய்வதா ? அல்லது புவியை தேர்வு செய்வதா ? என்ற குழப்பத்தில் கோலி உள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

இந்நிலையில் விராட் கோலிக்கு இந்தியாவின் முன்னாள் வீரரான சச்சின் தனது ஐடியா ஒன்றினை கொடுத்துள்ளார். அதில் சச்சின் குறிப்பிட்டதாவது : ஷமி சிறப்பாக பந்து வீசி வருகிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இங்கிலாந்து போன்ற மைதானங்கள் வேகப்பந்துவீச்சு உடன் ஸ்விங் அதிக அளவில் ஆகும் என்பதால் புவனேஸ்வர்குமார் இதுபோன்ற மைதானங்களில் நன்றாக பந்தினை ஸ்விங் செய்து வெஸ்ட் இண்டீஸ் அணியை கட்டுப்படுத்துவார்.

Shami

எனவே ஷமிக்கு பதிலாக குமாரை அணியில் சேர்ப்பது நல்லது இருப்பினும் நாளைய போட்டியில் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்காத வண்ணம் இருக்குமாயின் அப்பொழுது இந்திய அணியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரை நீக்கி அவருக்கு பதில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக ஷமியை அணியில் சேர்த்து ஆடினால் அது இந்திய அணிக்கு கைகொடுக்கும் என்று சச்சின் கூறியுள்ளார்.

Advertisement