இந்த ஒரு விஷயத்தை சரி பண்ணா தான் உன்னால ஸ்கோர் பண்ண முடியும் – கோலிக்கு அறிவுரை வழங்கிய சச்சின்

Sachin
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான காலத்திலிருந்து தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இன்றளவும் உச்சத்தில் இருக்கிறார். அவரது கிரிக்கெட் கேரியரில் ஒரு மோசமான ஆண்டாக விளங்கியது 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து தொடர் தான் ஏனெனில் அந்தத் தொடரின் போது ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய விராட் கோலி எப்போதும் இல்லாத அளவிற்கு படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். மொத்தம் 10 இனிங்ஸில் விளையாடிய அவர் 13.5 சராசரியுடன் 135 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார்.

- Advertisement -

அந்த டெஸ்ட் தொடருக்கு பின்னர் தனது டெஸ்ட் வாழ்க்கை முடிந்து விடுமோ என்ற பயம் இருந்ததையும் ஏற்கனவே கோலி தெரிவித்து இருந்தார். ஆனால் அப்போதைய கேப்டன் தோனி அவர் மீது நம்பிக்கை வைத்து தொடர்ச்சியான வாய்ப்புகளை அளித்து தற்போது டெஸ்ட் கிரிக்கெட் கிரிக்கெட்டிலும் கோலி முன்னணி வீரராக இருந்து வருகிறார். இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு தொடர்ச்சியான சொதப்பலுக்கு பிறகு தான் சச்சினிடம் சில அறிவுரைகளை பெற்றுக் கொண்டதாக விராட் கோலி ஏற்கனவே கூறியிருந்தார்.

அதன்படி தற்போது சச்சின் அப்போது என்ன அறிவுரை வழங்கினார் என்பது குறித்து அவர் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : 2014 ஆம் ஆண்டு நான் தொடர்ச்சியாக ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்த வேளையில் என்னுடைய தோள்பட்டை சற்று அகலமாக விரிந்தது என பலரும் எனக்கு சுட்டிக்காட்டி இருந்தார்கள். அந்த நேரத்தில் நான் சச்சினிடம் சென்று என்னிடம் உள்ள இந்தக் குறையை நான் எப்படி சரி செய்ய முடியும் என்று விவாதித்தேன்.

kohli 5

அது குறித்து எனக்கு அறிவுரை கூறிய சச்சின் : இங்கிலாந்து போன்ற மைதானத்தில் விளையாடும் போது இடுப்பு பகுதியை நிலையாக வைத்திருக்க வேண்டுமென்றும் இடுப்பு நிலைபெற்றால் தோள்பட்டை அதிக அளவு விரியாது என்றும் அதனால் உங்களுக்கு நல்ல கட்டுப்பாடு கிடைக்கும் என்று கூறினார். அவரின் அறிவுரைகளை பின்பற்றி 2018 ஆம் ஆண்டு சிறப்பாக விளையாடினேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Kohli

2014 ஆம் ஆண்டு தொடர்ச்சியான மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 2018 ஆம் ஆண்டு 5 டெஸ்ட் போட்டியில் விளையாடி 593 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆகி இருந்தாலும், 2வது டெஸ்ட் போட்டியில் 40 ரன்களை கடந்து ஓரளவு சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement